முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 இலட்சம் மதிப்பில் டயாலிசிஸ் மையம் கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாவட்டம், மேலூர் அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 இலட்சம் மதிப்பில் டயாலிசிஸ் மையத்தினையும், அம்மா ஆரோக்கிய திட்டத்தினையும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர்  பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், துவக்கி வைத்தார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று நமது மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையின் மூலம் ரூ.15 இலட்சம் மதிப்பில் இரண்டு டயாலிசிஸ் யூனிட் மக்களின் சேவைக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் 2015ல், அம்மா ஆரோக்கியத்திட்டம் அறிமுகப்படுத்தினார்.  அதற்கிணங்க மதுரை மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 2016 முதல் அம்மா ஆரோக்கியத்திட்டம் மூலம் 30 வயது நிரம்பியவர்களுக்கு வருடாந்திர உடல்நல பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 
  இதுவரை 1369 முகாம்கள் நடத்தப்பட்டு, 78642 நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.  மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 6,65,781 நபர்கள் மருத்துவக்காப்பீடு அட்டை பெற்றுள்ளனர்.  இதில் 1,63,825 அறுவைசிகிச்சைகள் ரூ.261.24 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  பொதுமக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இதுவரை 1476 மருத்துவ முகாம்கள் மாநகராட்சி, ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.  மேலும் அம்மா ஆரோக்கிய திட்டம் மூலம் 30 வயது நிரம்பிய அனைவருக்கம் இலவசமாக இரத்தவகை கண்டறிதல், இரத்தக்கொதிப்பு, சிறுநீரில் சர்க்கரையின் அளவு, உப்புசத்து கண்டறிதல், மார்பக புற்றுநோய், சளிப்பரிசோதனை, தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளை கண்டறிதல், கண் பரிசோதனை, நுண்கதிர்படம், இருதய மின்வரைப்படம் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் என தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள்) மரு.ருக்மணி, மேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.ஜீவஜோதி,  ஸ்ரீபிரியாதேன்மொழி, மரு.ஜெயந்தி, மரு.முரளிபால்கண்ணன், மரு.கலாமணி, மரு.இராதகிருஷ்ணன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து