முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் இம்மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக அரசு/நிதி உதவி/சுயநிதி (மெட்ரிக் நீங்கலாக) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர்  தெரிவித்ததாவது,

 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்ச்சியை உருவாக்கி உயர் மதிப்பெண் பெறும் வகையில் அதிகாரிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அப்துல்கலாம் 2020 ல் உள்ளோர்களை அழைத்து வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.

பெற்றோரிடம் விழிப்புணர்வு

10,11 மற்றும் 12 ம் வகுப்பு  பயிலும் அனைத்து  மாணவர்களையும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைப்பதற்காக தினந்தோரும் காலையில் சிறு தேர்வுகள் அனைத்துப்பள்ளிகளிலும் நடத்துதல், மேலும்  நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்கனவே நடைபெறும் தேர்வுகளுடன் அலகு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி,  பெற்றோரிடம் விழிப்புணர்வை உருவாக்கி மாணவர்களின் வருகையினை 100  சரிசெய்து, கற்றல் திறன் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

திடீர் ஆய்வு

அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் பணிகள், அனைத்துப் பாடங்களையும் கற்பித்தல்,  கற்றல் அடைவினை மேம்படுத்தல் ஆகியவற்றை கண்காணிக்க ஆய்வு அலுவலர், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும். அனைத்து  பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட  நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு நடனம், பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற இடங்களில் தனியார் ஆசிரியர்கள்  மூலம் சிறப்பு பயிற்சி அளித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். பள்ளி அளவில் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று  வெற்றிபெறக்கூடிய வகையில் சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் நடத்தப்படவேண்டும். புதிய மாணவர்கள் சேர்க்கையை  பொருத்த அளவில் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாணவர்களின் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சேர்க்கை செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்மை அங்காடி

மாணவர்களுடைய நற்பண்புகளை வளர்க்கும் விதமாக பரிசோதனை அடிப்படையில் நேர்மை அங்காடி சில பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது.  அதனுடைய செயல்பாட்டினை பொருத்து அனைத்துப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். வாசிப்பு பாடவேளையை கட்டாயமாக்கப்படும். மேலும் மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர்  போது செய்தி தாள் வாசிப்பதற்கு   ஒதுக்கப்படவேண்டும். பள்ளிவாளாகம் சுத்தம் செய்யப்பட்டு பள்ளித்திறக்கும் முதல் நாளன்றே விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் பணிகள் தொடங்கப்படவேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

முதன்மை மாவட்டமாக திகழ

அறிவியல் கண்காட்சி, கலை இலக்கிய விழா,  இலக்கிய மன்றம், போட்டிகள் மற்றும் மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இக்கல்வியாண்டினை முழுத்தேர்ச்சி கல்வியாண்டாக மாற்றி கடலூர் மாவட்டம் கல்வியின் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாக திகழ தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவ/மாணவிகள் ஆகியோரை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜி.குமாரசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து