முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவாழ்வு திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.21.06 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற தனிநபர் கடன் வழங்குதல் மற்றும் இயற்கை வேளாண் கூட்டமைப்பில் வேளாண் விளைப்பொருட்கள் சேகரிப்பதற்கு இரு சக்கர வாகனம் வழங்குதல் ஆகிய விழா நடைபெற்றது. இவ்விழாவில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  கலந்து கொண்டு, 48 நபர்களுக்கு ரூ.21.06 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.விழாவில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  பேசியதாவது-

 156 ஊராட்சிகளில்

புரட்சித்தலைவி அம்மா  கிராமப்புற ஏழை, எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட புதுவாழ்வு திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தினார்கள். இத்திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர்,  குருவிகுளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் மேலநீலிதநல்லூர் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 156 ஊராட்சிகளில் புதுவாழ்வுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

21422 நபர்களுக்கு தொழிற்பயிற்சி

156 கிராம ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு  ரூ.14 கோடியோ 77 இலட்சம் மதிப்பிலான நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  156 ஊராட்சி அமைப்பிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.18.94 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 1004 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும், 677 மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.10000/- ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. 3853 சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் 21422 நபர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 46 கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடன் மற்றும் 52 கூட்டமைப்புகளுக்கு நபார்டு வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது. 101 தனிநபர்களுக்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.  புரட்சித்தலைவி அம்மா  2016ம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று, மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம் மானியம் பெற்று 3 பெண்களுக்கு மொத்தம் ரூ.8.39 இலட்சம் மதிப்பில் ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது.

அமைச்சர் வேண்டுகோள்

மேலும், இயற்கை வேளாண் கூட்டமைப்பில் வேளாண் விளைப்பொருட்கள் சேகரிப்பதற்கு 2 நபர்களுக்கு தலா ரூ.42 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.83 இலட்சம் மதிப்பிலான தொழிற் கடன்கள் வழங்கப்படுகிறது. புதுவாழ்வு திட்டத்தின் கடனுதவி பெறும் நீங்கள் அதை பயன்படுத்தி வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.

பலர் பங்கேற்பு

இவ்விழாவில், கலெக்டர் (பொ) பூ.முத்துராமலிங்கம் கூட்டுறவு விற்பனை நிலைய துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையாபாண்டியன், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் பாஸ்கரன், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முக்கிய பிரமுகர் வேல்முருகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து