முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது இ-சேவை மைய கணினி இயக்குபவர்களுக்கு பயிற்சி கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ள பொது இ-சேவை மைய கணினி இயக்குபவர்களுக்கு பயிற்சியினை கலெக்டர் டி.பி.ராஜேஷ்,    தொடங்கி வைத்தார்.இக்கூட்டத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தெரிவித்ததாவது,

 பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை தற்போது வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள்  இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ள தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள், இ-சேவை மையங்கள், கனினி மையங்கள், (வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், கலெக்டர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில் நேரடியாகவும் அல்லது மகளிர் திட்ட களப்பகுதி ஒருங்கிணைப்பாளர்கள், புதுவாழ்வு திட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் உதவிபெற்றும் பதிவுகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   அறிவுறுத்தினார்கள்.;

பலர் பங்கேற்பு

இப்பயிற்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்  இலஞ்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், ஒருங்கினைந்த குழந்;தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அனைவருக்கும் திட்ட சிறப்பு ஆசிரியர்கள், புது வாழ்வு திட்ட அலுவலர்கள, ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து