முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழில் நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  முன்னிலையில்,  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது,

 அரசாணை வெளியீடு

 மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின்படி 1959ம் வருடத்திய தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் மாற்றம் செய்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிகளில் களிமண், வண்டல் மண் போன்றவற்றை விவசாய பயன்பாட்டிற்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலங்களுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 75 கன மீட்டரும். (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கனமீட்டரும் (30 டிராக்டர் லோடு), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் (10 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் (20 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும் எடுத்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

537 நீர்நிலைகளில் அனுமதி

அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன் படி கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 228 ஏரிகள், 2 நீர் வழித்தடங்கள் மற்றும் ஒரு நீர்தேக்கம், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 231 ஏரிகள் மற்றும் குளங்கள், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள 75 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகமொத்தம் 537 நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க கடலூர் கலெக்டர் அவர்களால் சிற்ப்பு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை கடலூர் மாவட்டத்தில் இப்புதிய விதிகளின்படி 2,06,463 கன மீட்டர் வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்கப்பட்டு 4,682 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

உதவி புரிய வேண்டும்

இச்சூழ்நிலையில் தற்போதைய வறட்சியின் காரணமாக இன்னலுக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் தொழில் நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு பணிகளின் மூலம் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணி மேற்கொண்டு புனரமைப்பு பணியினை உடனடியாக தொடங்கி முழுமையான அளவில் பணிகளை முடித்துத்தருமாறும், கடலூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட நீர்நிலைகளை தூர்வாரி வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்து அளித்தால் மிகவும் பேரூதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை. இதன்மூலம் கடலூர் மாவட்டத்திலுளள நீர் ஆதாரங்களின் கொள்ளளவு அதிகரிப்பதுடன் விவசாய நிலங்களில் மண்வளம் பெருகி அதிக விளைச்சலை பெருக்கமுடியும். இதேபோன்று கடலூர் மாவட்ட ஊரக பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இலக்கை முழுமையாக அடைய நீர் சுத்திகரிப்பு நிலையங்களை சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் அமைத்துத்தரவும், கடலூர் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ்,  மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு தொழில்நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து