ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக 4 பேர் கைது

புதன்கிழமை, 7 ஜூன் 2017      ஈரோடு

ரேஷன் அரிசி கடத்த முயன்ற பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 4 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

போலீஸாருக்கு தகவல்


பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பவானிசாகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையில் போலீஸார் இலங்கை அகதிகள் முகாமில் சோதனை நடத்தினர். அப்போது, கடத்த தயாராக வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
 இதுதொடர்பாக, முகாமைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (45), கிருஷ்ணன் மனைவி ராணி (55), பிரபாகரன் மனைவி கிருஷ்ணலீலா (35), கரூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த சுஜீந்தராஜ் மகன் பிரசாந்த் (35) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
 பின்னர், 4 பேரும் ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அரிசி மூட்டைகள் கடத்த பயன்படுத்தபட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து