முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமாபந்தி நிறைவு நாளில் ரூ. 104 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் பசிலி 1426) கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் கடந்த 01.06.2017,2.06.2017, 6.06.2017, 07.06.2017, மற்றும் 08.06.2017 இன்று ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் ஜமாபந்தி நடைபெற்ற நாட்களில் ஓசூர் வட்டத்தில் உள்ள 3; உள்வட்டத்தில் உள்ள 40 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் கோரி 202 மனுக்களும், நில வரி தனி பட்டா 15 கோரி மனுக்களும், முதியோர் உதவிதொகை கோரி 53 மனுக்களுலும், வீட்டுமனை பட்டா கோரி 165 மனுக்களும் உட்பிரிவு பட்டா கோரி 286 மனுக்களும், கனிணியில் திருத்தம் செய்தல் கோரி 9 மனுக்களும், புல எல்லை அளவிடுதல் கோரி 1 மனுவும், யு.டி.ஆர்.திருத்தம் கோரி 11 மனுக்களும், வாரிசு சான்று கோரி 9 மனுக்களும், சிறு விவசாயி சான்று கோரி 9 மனுக்களும், ஆகிரமிப்பு அகற்றுதல் கோரி 17 மனுக்களும், குடும்ப அட்டை கோரி 5மனுக்களும், மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 823 மனுக்களை கலெக்டர் சி.கதிரவனிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள். இதில் 60 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. 63 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் நிலுவையில் உள்ள 700 மனுக்கள் மீது பரீசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று ( 08.06.2017) இலவச வீட்டு மனை பட்டா 15 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 4 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், பட்டா மாற்றம் 22- நபர்களுக்கும், தனி பட்டா ( நகர நில வரி திட்டம்) 29 நபர்களுக்கும், தனி பட்டா 13 நபர்களுக்கும், சிறு விவசாய சான்று 2 நபர்களுக்கும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு ரூ.34 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் என ஆகி மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (08.06.2017) வழங்கினார்கள்.

விதிமுறைகள்

தொடர்ந்து கலெக்டர் உரையாற்றும் போது: ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1426 கீழ் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. பொதுமக்கள் பல்வேறு கோரிகைகள் குறித்து மனுக்களை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக அனுமதிபெற வீட்டு மனை பட்டா கோரி விண்ணபித்தவர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து உரிய நிர்ணயிக்கப்பட்ட கட்டம் செலுத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்ட பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் . வரும் காலங்களில் அனுமதி பெறதாக வீட்டுமனைகளை (லேஅவுட்) பொதுமக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது பொது மக்களின் நலன் கருத்தி அனைத்து மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் வசந்தா, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலர் ஐயப்பன், உதவி இயக்குநர் (நிலஅளவை) மனோகரன், உதவி ஆணையர் ஆயம் கீதா ராணி, உதவி இயக்குநர் ( வேளாண்மை) செல்வராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அனந்தபத்மநாபன், மாவட்டகலெக்டர் அலுவலக மேலாளர் தியாகராஜன், தனி வட்டாட்சியர் ராஜசேகர், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், சிவகுமார், மோகன், வட்ட சார் ஆய்வாளர் கிருஷ்ணன், ராஜலட்சுமி, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பூசன்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். துணை வட்டாட்சியர் சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து