இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கான தேர்வு கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கான தேர்வு மையங்களை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியானர் தேர்வாணையத்தின் மூலம் இந்து சமய அறிலையத்துறை செயல் அலுவலருக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டத்தில் 2,390 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 1,136 நபர்கள் தேர்வு எழுதினர்.  மீதமுள்ள 1,254 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் ஜெ.சுந்தரராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டடாட்சியர் என்.வேல்முருகன், பள்ளி தலைமையாசிரியர் சுசீலா ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து