ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.4 .50 கோடி மதிப்பில் தார் சாலை
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுபெற்ற பகுதியில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை பணிகள் தொடங்கப்பட்டன.
பூமி பூஜை
ஈரோடு மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 27-ஆவது வார்டில் ஈஸ்வரன் கோயில் வீதி, சொக்கநாதர் வீதி, வெங்கடாசலம் வீதி, பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட வீதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, இப்பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெங்கடாசலம் வீதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணியை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.இராமலிங்கம் தொடக்கி வைத்தார்.அதேபோல, பாதாள சாக்கடை பணிகள் நிறைவுபெற்ற 4-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 56-ஆவது வார்டில் மாதவகிருஷ்ணா வீதி, மண்டபம் வீதி, மாரிமுத்து வீதி உள்ளிட்ட வீதிகளில் ரூ. 1.60 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையும், இராமலிங்கம் தொடக்கி வைத்தார். தென்னரசு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான்,செயற்பொறியாளர் விஜயகுமார் உதவி ஆணையர்கள் அசோக்குமார், சண்முகவடிவு, அதிமுக பகுதிச் செயலாளர்கள் மனோகரன் முருகுசேகர், கேசவ மூர்த்தி,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்