அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறிய கவர்னர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      புதுச்சேரி

புதுவை கவர்னருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும ;இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. உயர் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் தலையிட்டதால்இந்த மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் புதுவை சட்டசபையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

 50 சதவீத ஒதுக்கீடு

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில்சிலர் திட்டமிட்டு சதி செய்து அரசை குற்றம் சாட்டும் வேலையில்இறங்கி உள்ளனர். இதனால்இது தொடர்பான முழுமையான அறிக்கையை சபையில் தாக்கல் செய்கிறேன். தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும்இல்லாத வகையில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம், பட்டைய படிப்பிற்கான 50 சதவீத ஒதுக்கீட்டை புதுவை அரசு பெற்றது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடு கிடையாது. புதுவை அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை,  கலந்தாய்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் படி நடத்தப்பட்டது. நீட் தேர்வில் தகுதி பெற்ற 613 மாணவர்களில் புதுவை ஒதுக்கீடான 162 இடங்களுக்கு 267 மாணவர்கள்மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆணை

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அரசு நடத்திய 2 கலந்தாய்விலும்கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கை தரவரிசை, ஒதுக்கீடு, ரோஸ்டர் பட்டியல் ஆகியவை சென்டாக்இணையதளத்தில் மே 1-ந் தேதி கலந்தாய்வுக்கு பல நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. இட ஒதுக்கீடு அரசு ஒதுக்கீட்டில்முழுமையாக அமல்படுத்தப்பட்டது. எந்த ஒரு பின்தங்கிய மாணவரின் ஒதுக்கீடும்மறுக்கப்படவில்லை. மாற்றப்படவில்லை. 2 கட்ட கலந்தாய்வில் 91 இடங்கள் புதுவை அரசின் ஒதுக்கீடாகவும், 118 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும் ஆணை வழங்கப்பட்டது.

அரசு எச்சரிக்கை

இந்த நிலையில் 24-ந் தேதி நீட் தகுதி தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து மத்திய அரசிடம் இருந்து கடிதம்வந்தது. இதையடுத்து குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் இறுதி கட்ட கலந்தாய்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் கூடுதலாக 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் புதுவை அரசு ஒதுக்கீட்டில் 101 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பட்டய படிப்பு சேர்க்கை ஆணை 13 பேருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 114 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. கட்டணக்குழு தலைவர் முதலில் 3 லட்சம் நிர்ணயித்தார். இதை ஏற்க மருத்துவ கல்லூரரி மறுத்து கோர்ட்டிற்கு சென்றனர். இதையடுத்து 5.50 லட்சம்கட்டணமான தலைவர் நிர்ணயித்தார். இதையும் ஏற்க நிர்வாகம்மறுத்தன. இதனால் சென்டாக் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களை சேர்க்க தனியார் கல்லூரிகள்மறுத்தால் ஆட்சேபணை இல்லாத சான்றிதழ் வாபஸ் பெறப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. மாணவரை சேர்க்க மறுத்த 2 கல்லூரிகளுக்கு அரசு நேட்டீசும்அனுப்பியது. இதன் நகல்மத்திய அரசுக்கும், மத்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி சென்டாக் கவுன்சிலிங் இடத்திற்கு கவர்னர் நேரில் சென்றபோது எங்கள்அரசின்மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளனர். நான் தலையிட்டு சரி செய்தேன் என்று கூறியுள்ளார்.

கவர்னருக்கு சவால்

கவர்னர் இந்த குற்றச்சாட்டை நிருபிக்க முடியுமா? என சவால் வீடுகின்றேன். புதுவை மக்களையும், மாணவர்களையும் திசை திருப்பி கலப்படமற்ற பொய்யை கூறிய கவர்னர் பகிரங்க மன்னிப்புகேட்க வேண்டும். இதுபோன்ற உண்மைக்கு புறம்பாக மக்களை திசை திருப்பும் கவர்னரின் செயல்பாடுகளை சட்டமன்றத்திலும்,மக்கள்மன்றத்திலும் முன் வைக்கின்றேன். கடந்த 31-ந் தேதி கவர்னர் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான கட்டண விகிதம் 5.50 லட்சம் மட்டுமே என அறிவித்தார். நிகர்நிலை பல்கலைக்கழங்களில் ரூ.5.50 லட்சத்திற்கு இடங்களை வாங்கி தருகின்றேன் என்றும் கூறி இருக்கிறார். இதை நம்பி 22 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால்இன்று அந்த மாணவர்கள் கல்லூரியில் சேரமுடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது கவர்னர் மருத்துவ கவுன்சில் கட்டணத்தை நீர்ணயிக்கும் என்று கூறியுள்ளார். முன்னுக்குப்பின் முரணாக கவர்னர் பேசியுள்ளார்.

வழங்கியது யார்

சென்டாக்கின் 2 கலந்தாய்வு முடிந்த பின்னர் 3வதாக கடந்த 31-ந் தேதி கவர்னர் கலந்தாய்வு நடத்தினார். இது இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறமபானது. இந்த அதிகாரத்தை கவர்னருக்கு யார் வழங்கியது? மாணவர்களின் நலன் கருதி வெளிப்படையாக அனைத்து விதிகளும் கடைபிடிப்பட்டு, மத்திய அரசின் உத்தரவுகள் பின்பற்றப்பட்டு சென்டாக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. புதுவை வரலாற்றில்முதல் முறையாக அரசு ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இந்த அரசால் பெறப்பட்டது. இடஒதுக்கீட்டு கொள்கைப்படி சரியாக நிரப்பப்பட்டது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டணக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டம் என்பதே அரசின் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து