குறிஞ்சிப்பாடியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி நிறைவு சான்று வழங்கும் விழா

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      கடலூர்
certificate issue programme 2017 06 16

குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் புலியூர் ஊராட்சி அங்கன்வாடி குழந்தைகளுக்கும் முன் பருவ கல்வி முடித்த குழந்தைகளுக்கு நிறைவு சான்று வழங்கும் விழா  அங்கன்வாடி வளாகத்தில் நடைபெற்றது.

 கல்வி சான்று

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மேற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், வட்டார வள மைய பயிற்சி அலுவலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியை குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாயிராபானு  முன் பருவ கல்வி முடித்த அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி சான்று வழங்கி பேசியதாவது.

சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

ஒவ்வொரு அங்கன்வாடி மைய ஆசிரியர்கள் அவரவர் பகுதியில் உள்ள தாய் தந்தைகளிடம் நமது தமிழக அரசு அளிக்கும் சலுகைகளை பற்றியும் முன் பருவ கல்வி குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்றும் எடுத்து கூறி குழந்தைகளின் சேர்க்கையை அதிகப் படுத்தவேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து பகுதியை சேர்ந்த அங்கன்வாடி மைய ஆசிரியைகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து