முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் புலியூர் கிராமத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தினை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயல்பாக குறுவை சாகுபடி 87,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும். நெல் பயிர் சாகுபடி தற்போதுள்ள நீர் ஆதாரங்களைக் கொண்டு குறுவை தொகுப்புத் திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 52,100 ஏக்கர் பரப்பளவிலும், நெல் பயிருக்கு மாற்றாக பயறுவகை பயிர்கள் சாகுபடி 35,600 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\

பயிறுவகை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் குறுவை சாகுபடிக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நெல் நடவினை குறித்த காலத்தில் மேற்கொள்ளவும் களை எடுப்பதை எளிமையாக்கும் வகையிலும் நடவு இயந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4,000 வீதம் 23,000 ஏக்கருக்கும், நிலத்தின் தன்மையை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு ரூ.400 வீதம் 23,000 ஏக்கருக்கும், உயிர் உரங்கள் ஏக்கருக்கு ரூ.120 வீதம் 23,000 ஏக்கருக்கும் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஏக்கருக்கு ரூ.200 வீதம் 7,000 ஏக்கருக்கும் 100மூ மானியமாக வழங்கப்படும்.

இது தவிர பருவ மழையினை முழுமையாக பயன்படுத்தி குறுவை சாகுபடியினை ஊக்கப்படுத்தும் வகையில் பயறுவகை சாகுபடிக்கு தேவையான தரமான பயறு வகை விதைகள் ஏக்கருக்கு ரூ.960 வீதம் 20,500 ஏக்கருக்கும், மகசூலை அதிகரிக்க இலை வழி டிஏபி உரம் ஏக்கருக்கு ரூ.520 வீதம் 20,500 ஏக்கருக்கும் மற்றும் உயிர் உரங்கள் விநியோகிக்க ஏக்கருக்கு ரூ.120 வீதம் 20,500 ஏக்கருக்கும் 100மூ மானியமாக வழங்கப்படும்.

இது தவிர பருவ மழையினை முழுமையாக பயன்படுத்தி குறுவை சாகுபடியினை உடனே தொடங்கும் பொருட்டு உழவுப் பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.500 வீதம் 17,500 ஏக்கருக்கும் என்ற அளவில் மானியத் தொகையும், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் 110 மில்லி மீட்டர் விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளம் கொண்ட Pஏஊ குழாய்கள் 30 எண்கள் கொண்ட 350 அலகுகள் அலகு ஒன்றுக்கு ரூ.21,000 வீதமும் மானியம் வழங்கப்படும்.மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு பகுதியின் மண்வளத்தினை அதிகரிக்கும் வகையில் பசுந்தாளுரப் பயிர் சாகுபடி ஏக்கருக்கு ரூ.1,200 வீதம் 8,750 ஏக்கரில் மானியம் வழங்கப்படும்.

பருத்தி, வெள்ளரி

தமிழ்நாடு அரசு மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதையும் தள்ளுபடி செய்ததுடன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் இழப்புக்கு இடுபொருள் மானியமாக ரூ.146.31 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து பாதிப்படைந்த 1,39,190 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இன்றைய தினம் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 85 பயனாளிகளுக்கு ரூ.56,600 மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தற்போது உள்ள சூழலில் மாற்றுப் பயிராக பருத்தி, வெள்ளரி போன்றவற்றை பயிர் செய்ய முன்வர வேண்டும். மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்." என தெரிவித்தார்.

விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ.;கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் தங்க.கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து