தென்காசியில் ஆட்டோ டிரைவர் கொலை கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்: எஸ்பி. அருண்சக்திகுமார் உத்தரவு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      திருநெல்வேலி

தென்காசியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு  கடையநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தென்காசியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் நெல்லை மாவட்ட எஸ்பி. அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 கைது

தென்காசியில் கடந்த 16 ம் தேதி இரவு கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகம்மது ரபிக் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர் முகம்மது இஸ்மாயில் எனபவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கடைநல்லூரை சேர்ந்த அப்துல்கக்கூர் மற்றும்  சண்முகம் ஆகிய இருவரையும் தென்காசி போலீஸார் கைது செய்தனர்.

எஸ்.பி.அதிரடி

மேலும் விசாரணையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகம்மது கக்கூரின் மாமனார்தான் சண்முகம் என்பதும்,  இந்த கொலைக்கு உதவியாக சண்முகம் செயல்பட்டார் எனபதும் தெரியவந்தது. சண்முகம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி. அருண்சக்திகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலங்குளம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து