முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-சேவை மையங்களில் மாற்று மின்னணு ரேசன் கார்டு மற்றும் புதிய மின்னணு ரேசன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது மாவட்ட கலெக்டர் சிவஞானம் தகவல்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்.- விருதுநகர் மாவட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்          இ-சேவை மையங்களில் மாற்று மின்னணு ரேசன் கார்டு மற்றும் புதிய மின்னணு ரேசன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்.  தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது :-
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ஆகிய இடங்களில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் தற்பொழுது பயன்படுத்திவரும் ரேசன் கார்டுக்கு பதிலாக, புதிதாக மின்னணு ரேசன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5,54,438 குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,64,542 குடும்ப அட்டை தாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வரப்பெற்றுள்ளது. இதில் 3,24,171 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு ரேசன் கார்டு தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ, மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையங்களில் ரூ.30 - கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு ரேசன் கார்டு உடனடியாக பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதற்கு பழைய ரேசன் கார்டில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணுக்கு  ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி எண்) அனுப்பப்படும். அந்தக் கடவுச்சொல்லை பயன்படுத்தி புதிய மின்னணு ரேசன் கார்டு வழங்கப்படும். பழைய ரேசன் கார்டுக்கு பதிவு செய்த செல்போன் எண் தெரியாதவர்களுக்கு இ-சேவை மையங்களில் புதிய மின்னணு ரேசன் கார்டு வழங்க இயலாது.
புதிய மின்னணு ரேசன் கார்டில் உள்ள விபரங்களை திருத்தங்கள் செய்யும் பணி     இ-சேவை மையங்கள் மூலம் செய்யலாம். பொதுமக்கள் மின்னணு ரேசன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகையை மாற்றம் செய்தல், சிலிண்டர்களின் விவரத்தினை மாற்றம் செய்தல், குடும்ப தலைவர் பெயரை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ-சேவை மையங்களில் ரூ.60ஃ- செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற பிறகு அருகில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் இ-சேவை மையத்தை அணுகி திருத்தப்பட்ட மின்னணு ரேசன் கார்டுகளை ரூ.30 - செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ள வுNநீனுளு ஆண்ராய்டு அப்ளிகேசன் மூலமும் மேற்கூறிய சேவைகளை தாங்களே செய்து கொள்ளலாம். சேவை தொடர்பாக புகார்   தெரிவிக்க  வேண்டுமெனில்  கட்டணமில்லா  தொலைபேசி எண்  1800 425 2911-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து