முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 கூடுதல் நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்களாக வும், மத்திய அரசு வழக்கறிஞர் களாகவும் பணிபுரிந்து வந்த வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நேற்று இவர்கள் 6 பேரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜிந்தர் காஷ்யப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த நியமனங்கள் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து