முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலத்தில் நிற்குமா? பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு!

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-பருவநிலை மாற்றங்கள் தொடர்பான படைப்புகளை உள்ளடக்கிய அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமா என பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பள்ளி மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பருவநிலை மாற்றங்கள்,சுற்றுச்சூழல் மாறுபாடு,மீண்டும் மீண்டும் பயன் படுத்தக் கூடிய சக்தி,அறிவியல் ஆய்வகங்கள் போன்றவற்றினை உள்ளடக்கிய அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பிரபுவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வந்த இந்த அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில்  தற்போது தெற்கு ரயில்வே பகுதியில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.வரும் 24ம் தேதி கெடை ரோட்டிலும்,விருதுநகரில் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும்,28ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆறுமுகநேரியிலும் இந்த அறிவியல் எக்ஸ்பிரஸ் பள்ளி மாணவ,மாணவியருக்காக முகாமிடுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டிலும்,விருதுநகரிலும் நின்று கண்காட்சி நடத்திச் சென்றிடும் இந்த ரயில் மதுரை மாவட்டத்தை புறக்கணித்து தனது பயணத்தை மேற்கொள்கிறது.இதனிடையே பள்ளி மாணவ,மாணவியருக்கு பருவநிலை மாற்றம் தொடர்பாக கண்காட்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என்று மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுவரை கண்காட்சி ரயில்கள் எதும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாத நிலையில் இந்த அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் ஏதாவது ஒருநாள் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் மாணவ,மாணவியர் காத்திருக்கின்றனர்.மனது வைக்குமா ரயில்வே நிர்வாகம்?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து