முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் பாரம்பரிய சித்த மருத்துவ மறுமலர்ச்சி மாநாட்டில் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.-   தமிழகத்தில் சித்த மருத்துவதிற்கென தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பாரம்பரிய சித்த மருத்துவ மறுமலர்ச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
   புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி நகர்மன்ற வளாகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ மறுமலர்ச்சி மாநாடு, மூலிகை மருத்துவ கண்காட்சி மற்றும் இளவச சித்த மருத்துவ ஆலோசனை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் நில அளவியல்துறை தலைவர் முனைவர் ஜ.வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். இதில் இந்திய மருத்துவ ஆய்வு மையம், மகா ஆத்மா அறக்கட்டளை இயக்குனரும், பாரம்பரிய மருத்துவருமான லயன் இரா.பாபு, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ உயர் ஆய்வு மையம் உதவி பேராசிரியர் டாக்டர்.சி.எஸ்.சகாயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
 முன்னதாக மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
 தமிழகத்தில் சித்த மருத்துவதிற்கு தனி கல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பாரம்பரிய சித்த மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சித்த மருத்துவ நலவாரியம் அமைக்க வேண்டும், நலிவடைந்த இந்;த மருத்துவர் குழந்தைகளுக்கு சித்த மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,  சித்த மருத்துவ ஆய்வகங்கள், மண்டலம் தோறும் சித்த மருந்துகளை தரப்படுத்த வேண்டும், கிராமப்புற சுய உதவிக்குழுக்களுக்கு மூலிகை மருந்துகள் தயாரித்தல், மூலிகை வளர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஊராட்சி மையங்கள் ஒவ்வொன்றிலும் மூலிகைத் தோட்டம் அமைத்து அதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் சித்த மருத்துவ வாகனம் அமைத்து சித்த மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் சித்த மருத்துவ பிரிவு ஏற்படுத்த வேண்டும்;. மாவட்டந் தோறும் சித்த மருந்துகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். மூலிகை சேகரிப்பவர்களை ஊக்கப்படுத்தி அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலை செய்யும்போது மூலிகைகளை அழிக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக வைத்தியர்களு;ககு மாவட்ட நிர்வாகம் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் தலைமை ஆசிரியர் ரமேஸ்; நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து