முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 29 ஜூன் 2017      தேனி
Image Unavailable

   தேனி.-       தேனி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியிலிருந்து சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, 7 பள்ளிகளைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்று (29.06.2017) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி தேனி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியிலிருந்து, பி.சி.பெண்கள் உயர்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.
 விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன்-26-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழக அரசு மது, கள்ளச்சாராயம், ஹெராயின் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளது.
      அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், போதைப் பொருட்களை பயன்படுத்துவோர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு உட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். போதைக்கு அடிமையானவர்களை நாம் கண்டறிந்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வுவை ஏற்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் சென்று ஆலோசனைகள் வழங்கி அவர்களுக்கு மறு வாழ்வு அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ந.வெங்கடாசலம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 இப்பேரணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வசந்தி அவர்கள், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் திருமதி.பாண்டியம்மாள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.பத்மாவதி அவர்கள், காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.சேது அவர்கள், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் முத்துக்குமார் அவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் திரு.ஜெயசந்திரன் அவர்கள், செயலாளர்  .என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து