வேலூர் மாவட்டத்தில் ரூ.5.0 கோடி மதிப்பீட்டில் விளையாட்டரங்கம் விரைவில் உருவாக்கப்படும் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      வேலூர்
Vellor col 2017 06 02

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் அரக்கோணம் நகராட்சி டி.என்.எச்.பி. காலணியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டேக்வாண்டோ உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தை பள்ளி கல்வி,; விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழா சிறப்புiயாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி..ராமன். தலைமை தாங்கினார்.இந்த விழாவிற்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி அவர்களும் முன்னிலை வகித்தனர்.

ஊக்கத்தொகை

பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது. மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்த டேக்வோண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த முதலவர் அம்மா இந்தியாவிலேயே தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களையும், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கணைகளுக்கு நிதியுதவிகளை வழங்கி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு என்று தனியாக ஒரு பல்கலைகழகத்தை உருவாக்கி விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூ.4.80 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையினை வழங்கியுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் அம்மா சர்வதேச அளவிலான நேரு விளையாட்டரங்கினை அமைத்து தமிழகத்திற்கு பெருமையை சேர்த்தார்கள்.

வேலூர் மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ரூ5.0 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ரூ.1.0 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் ஒரு விளையாட்டரங்கமும் விரைவில் கட்டப்படும். இந்த விளையாட்டரங்கம் தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தில் ரூ.70 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ24 இலட்சம் தனியார் பங்களிப்பும் உள்ளது அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக உருவாக்கப்படும் இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் மேம்படும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஐமான ஒன்று. தோல்வி என்பது வெற்றிக்கான படிகட்டுகள் மேலும் இளைஞர்கள் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. மூச்சு நின்றால்தான் மரணம் அல்ல முயற்சி செய்யவில்லை என்றாலும் அது வெற்றி கிடைப்பதில் ஏற்படும் மரணம் ஆகும். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இந்த அரக்கோணம் டோக்வோண்டோ விளையாட்டு மூலம் இப்பகுதியல் உள்ள பல இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் எதிர் வரும் காலங்களிலும் இந்த விளையாட்டை மாணவர்கள் சிறந்;;த முறையில் கற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கும் இந்தயாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று வாழ்த்தி விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய 100 நாள் சாதனை கையேட்டினை பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் அவர்களும், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் வெளியிட்டார்கள். மேலும் வருவாய் துறையின் மூலம் 120 இருளர் இனத்தை சார்ந்தவர்களுக்கு இருளர் இன சான்றிதழ்களையும், 44 பயனாளிகளுக்கு ரூ.5.இலட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவி, திருமண நிதியுதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவித்தொகையினையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஜி.விஜயன், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வேக்வாண்டோ சங்கத் தலைவர் மரு.சி.எஸ்.சந்திரமௌலி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் துரைகுப்புசாமி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கே.ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஜி.கமலகுமாரி, நகராட்சி பொறியாளர் எம்.சண்முகம், அரக்கோணம் வட்டாட்சியர் பாஸ்கரன், அல்ட்ராடெக் நிர்வாக அலுவலர் ஜி.உதயகுமார், கிளைத் தலைவர் பிரசாந்த்ரஸ்தோகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து