முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்தூர் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 4 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஊராட்சிகளின் வாக்காளர்களின் பதிவு அலுவலரும், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான அ.சுப்பிரமணி வெளியிட்டார். ஆத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் 91 ஆயிரத்து 23 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016 அக்டோபருக்கு பின் 2ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், காந்திகிராமம், செட்டியபட்டி, வீரக்கல், என்.பஞ்சம்பட்டி, மணலூர் உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. 1995ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகளின் (தேர்தல்கள்) விதிகளுக்கு இணங்க சிற்றூராட்சி முதல் அனைத்து கிராம வார்டுகளுக்கான வாக்களாகர்கள் பட்டியல் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் அடங்கிய விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலின் நகல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிற்றூராட்சி, மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி வாக்காளர் பதிவு அலுவலருமான அ.சுப்பிரமணி வெளியிட, தனி அலுவலரும், ஆத்தூர் வட்டார வளர்;ச்சி (கி.ஊ) அலுவலருமான ஜெயச்சந்திரன் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் கிராம ஊராட்சிகளின் செயலாளர்கள் காந்திகிராமம் தெய்வம், மணலூர் திருப்பதி, தேவரப்பன்பட்டி கண்ணன், சித்தரேவு சிவராஜ் உட்பட 22 கிராம ஊராட்சி செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பி.முருகன், தேர்தல் பிரிவு உதவியாளர் என்.பாப்பாத்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து ஊராட்சி வாக்காளர்கள் பதிவு அலுவலர் அ.சுப்பிரமணி கூறுகையில் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் 91 ஆயிரத்து 23 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 929 பேரும், பெண் வாக்காளர்கள் 47 ஆயிரத்து 90 பேரும், மூன்றாவது பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் 4 பேரும் உள்ளனர். ஆத்தூர் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் கடந்த அக்டோபர் 2016-ல் 89 ஆயிரத்து 123 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 2 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்றார். ஊராட்சிகள் தேர்தலுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்யக் குறிப்பிட்டுள்ள இறுதிநாள் வரை குறிப்பிட்ட மாற்றம் கோரி வரப்பெறும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளின் மேல் மேற்படி சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப்படும் ஆணைகள் ஊராட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப்படும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து