முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர காசநோய் கண்டறியும் முகாமினை மாவட்டகலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் .- விருதுநகர் மாவட்டம், தீவிர காசநோய் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்.  விருதுநகர் அல்லம்பட்டியில் துவக்கி வைத்தார்கள்.
தேசிய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் ஜூலை   2-ம் வாரம் முதல் 4-ம் வாரம் வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்திலும், தேசிய நல குழுமத்தின் சார்பில் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் 14.07.2017 முதல் 31.07.2017 வரை நடைபெறவுள்ளது. இம்முகாமினை விருதுநகர் அல்லம்பட்டியில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.07.17) துவக்கி வைத்தார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் 14.07.2017 முதல் 31.07.2017 வரை கிராமங்கள், மில் மற்றும் சுரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அகதிகள் முகாம்களில் உள்ள மக்களிடம் காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதை அரசு சுகாதார மற்றும் காசநோய் ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று, அறிந்து அறிகுறிகள் தென்பட்டால், உரிய சளிப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு காசநோய் இருக்கும் பட்சத்தில் காசநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படும். 14.07.17 முதல் 16.07.17 வரை விருதுநகர், அல்லம்பட்டி மற்றும் ஆமத்தூர், வெம்பக்கோட்டை வட்டாரம் மற்றும் நரிக்குடி வட்டாரங்களிலும், 16.07.17 முதல் 17.07.17 வரை திருச்சுழி வட்டாரத்திலும், 19.07.17 முதல் 21.07.17 வரை வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி  வட்டாரங்களிலும், 22.07.17 முதல் 25.07.17 வரை இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டாரங்களிலும், 26.07.17 முதல் 28.07.17 வரை சாத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரங்களிலும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது.
 காசநோய் காற்றினால் பரவக் கூடிய ஒரு தொற்று நோய். இது மைக்கோபேக்டீரியம் டியுபெர்க்குளோசிஸ் என்னும் கிருமியினால், காற்றின் மூலம் பரவக்கூடியது. இது நுரையீரல் மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கக்கூடிய நோய். இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், சளியில் இரத்தம், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு மற்றும் நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அனைவரும் வீடு தேடி வரும்  அரசு சுகாதார பணியாளர்களிடம் தேவையான சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டு முறையான முழுமையான சிகிச்சை பெற்று காசநோயில் இருந்து தங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்;.  
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் மரு.அமுதா (தொழுநோய்), மரு.நிர்மலாதேவி (காசநோய்), விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர்  சந்திரசேகரன், அரசு மருத்துவர் .துரைராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து