முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி ஆளுநர் - முதல்வரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      புதுச்சேரி

சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் ஒரு கருத்தை தெரிவித்து தமிழக மக்களையும்,மாணவர்களையும் ஏமாற்றி  வருகிறார்.  புதுவையில் நீட்தேர்வு குறித்து சிறு அடிப்படை கருத்து கூட கண்டு கொள்ளப்படவில்லை. புதுவையை ஆளும் காங்சிரஸ, திமுக கூட்டணி அரசு மாணவர்களுக்கு துரோகம்இழைத்து வருகிறது. திமுக ஆதரவை விலக்கி கொள்ளுமாh? என ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும். திமுக மாநிலத்திறகு மாநிலம்இரட்டை வேடம் போடுகிறது. இது மக்களிடம் எடு படாது. புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. கவர்னரை கண்டித்து பந்த் போராட்டம் நடத்தி நாராயணசாமி தோல்வி கண்டுள்ளார். தற்போது கவர்னருக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். இதே நாராயணசாமி தொகுதிக்குள் விடாதீர்கள், மறியல்செய்யுங்கள் என 20 நாள் முன்பு கூறினார். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? புதுவையி பல்வேறு நலத்திட்டங்களில் புதிய பயனாளிகள் யாரையும் சேர்க்கவில்லை. நிதி ஒதுக்காமல் இருப்பதால் தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பித்து ஓராண்டாகியும் பலன்பெற வில்லை. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். விண்ணப்பித்த பயனாளிகளுக்கு நிதி தர வலியுறுத்தியும், செயல்படாத காங்கிரஸ், திமுக கூட்டணி அரசை கண்டித்தும்,கவர்னர் செயல்பாட்டை திருத்திக்கொளள்ள வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நாளை மறுநாள்(21-ந் தேதி) காலை 9.30 மணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எம்பிபிஎஸ் இடங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு பெற அரசாணை வெளியிட வேண்டும். கவர்னர் இதில் தலையிட்டு இந்த இடங்களை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அதிமுக எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து