முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்டம் காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தீவிர காசநோய் கண்டறியும் முகாமினை கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்     இம்முகாமில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்  தெரிவித்ததாவது.

 சிறப்பு முகாம்

காசநோய் தொற்று இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற தீவிர முனைப்பில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் நாடு முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாமினை தொடங்கியுள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் காசநோய் கண்டறியும் முகாம் ஜுலை-14ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதிவரை நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காசநோய் அதிகம் பாதிப்புள்ள கிராமங்கள், புறநகர் பகுதிகள், உட்புற கிராமங்கள் ஆகிய இடங்களில் உள்ள மக்களிடம் காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதை அரசு சுகாதார மற்றும் காசநோய் பணியாளர்கள் வீடு வீடாக சென்று காசநோய் பற்றி தெரிவித்து, அறிகுறிகள் தென்பட்டால் சளிப்பரிசோதனை செய்கின்றனர். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் சளி, இருமல் இருந்தால் காசநோய் அறிகுறிகளாக கண்டறியப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்படுபவர்களுக்கு குறிகிய கால நேரடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இம்மகாமில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் எஸ்.மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜவஹர்லால், துணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) (காசநோய்) டாக்டர் எஸ்.கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகணபதி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (காசநோய்) சுந்தரவடிவேல் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து