முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் தொடர்வதாக அய்யாகண்ணு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வந்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக விவசாயிகள் நேற்று சந்தித்தனர்.

தேசிய தென் இந்திய நதிகள் நீர் இணைப்பு சங்கத்தினர் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு நேற்று 10 ஆவது நாள். இந்நிலையில், தமிழக முதல்வர் டெல்லிக்கு வந்திருப்பதாக அறிந்து அவரை போராட்டம் நடத்தும் விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் அவர் விவசாயிகள் பிரச்சனைக்கு தமிழக அரசு காரணம் இல்லை எனவும், மத்திய அரசு தான் தடையாக இருப்பதாகவும் விவசாயிகளிடம் விளக்கியதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பிற்கு பின் அய்யாகண்ணு டெல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாராயக்கடைகள் பல மூடப்பட்டு விட்டதாலும், 100 சதவிகிதமாக இருந்த வருமானம் ஜி.எஸ்.டி.யால் 30 என்றாகி தமிழக அரசின் வருமானம் குறைந்து விட்டது. இதனால், கூட்டுறவு கடன் தள்ளுபடி மீதான எனது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாகக் கூறி எங்களிடம் முதல்வர் வருந்துகிறார். அரசிற்கு வேறு ஏதாவது வகையில் வருமானம் கிடைத்தால் கடன் தள்ளுபடிக்கு முயல்வதாகவும் தெரிவித்தார். இந்த கூட்டுறவு கடன் வசூலுக்காக எந்தவிதத்திலும் விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது என தன் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தகவல் அளித்தார்.

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதால் அப்பிரச்சனையை தம் எம்.பி.க்களை வைத்து நாடாளுமன்றத்தில் எழுப்பும்படி கோருவதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பு எங்களுக்கு முழுதிருப்தியை அளிக்கிறது. எனத் தெரிவித்தார்.

எனினும், தங்கள் போராட்டம் மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் தொடரும் என அய்யாகண்ணு அறிவித்துள்ளார். இதற்கு அவர் தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடன் தள்ளுபடி என்பது தற்காலிகம் எனவும், நிரந்தரத் தீர்வு விவசாயப் பயிர்களுக்கான நியாய விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை அமலாக்குவது, தென் இந்திய நதிகளை இணைப்பது, காவிரி மீதான தீர்ப்பை அமல்படுத்த மேலாண்மை வாரியம் அமைப்பது, தனிநபர் காப்பீடு போன்றன எனவும் அய்யாகண்ணு தெரிவித்தார். இந்த கோரிக்கைகள் அத்தனையும் மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதால் அவர்களிடம் இதை வலியுறுத்தி தங்கள் போராட்டம் தீவிரமாக நடைபெறும் எனவும் அய்யாகண்ணு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து