ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் கவிதை போட்டி

siva news

சிவகங்கை.- மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரண்மனை மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஸ்மென்ட் இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான அப்துல்கலாம் ஓவியம் மற்றும் கவிதைப்போட்டி நடத்தப்பட்டது. நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 25 பள்ளிகளில் இருந்து சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கவிதைப்போட்டி
கவிதைப்போட்டியில் ஆகஸ்வர்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி குகப்பிரியா முதல் பரிசும், மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவி சசிகலா இரண்டாம் பரிசும், ஏஎஸ்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி மூன்றாம் பரிசும், மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகம்மது பைசல் நான்காம் பரிசும் பெற்றனர்.
ஓவியப்போட்டி
9ம் வகுப்பு முதல் +2 வரை
பில்லூர், புனித சேவியர் பள்ளி மாணவன் கபிலன் முதல் பரிசும், சிவகங்கை, ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்காதேவி இரண்டாம் பரிசும், புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவன் பிராகஷ் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை
சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவன் கிஷோர் முதலாம் பரிசும், திருப்பத்தூர் என்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமிகாந்தி இரண்டாம் பரிசும், மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவி செரின் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
வுpழாவில் இளைய மன்னர் மகேஷ்துரை, நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சேர்மன் பாருக் மற்றும் ஆசரியர்கள், ஐஓபி அனந்தராமன் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து