முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே காட்டுப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! மானை அடித்துக் கொன்று தின்றதால் கிராமமக்கள் அச்சம்!!

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை காட்டுப்பகுதியில் நடமாடும் சிறுத்தை புள்ளிமானை அடித்துக் கொன்று தின்றதாக வெளியான தகவல்களால் அப்பகுதி விவசாயிகளும்பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடுகளும் விவசாய விளை நிலங்களும் நீர் நிரம்பிய கண்மாய்களும் உள்ளன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து தப்பிவந்த மான்கள் கூட்டமொன்று சிவரக்கோட்டை கண்மாயில் தங்கி தற்போது இனப்பெருக்கம் செய்து 50க்கும் மேற்பட்ட மான்கள் கொண்ட பெரியகூட்டமாக உருவெடுத்துள்ளது. அதே போன்று சிவரக்கோட்டையை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் அரியவகை நரிகள்,காட்டுபன்றிகள், மயில்கள்,முயல்கள்,கீரி, எரும்புதின்னி உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.தற்போது இந்த காட்டுப்பகுதிக்குள் எங்கிருந்தோ தப்பி வந்து நடமாடிவரும் சிறுத்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவரக்கோட்டை பகுதியை சுற்றிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.இதையடுத்து அப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட ஊரணிகள் மழை நீரால் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீர் கமண்டல நதிக்கு வழிந்தோடியுள்ளது.இதனால் மகிழச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழச்சியுடன் தங்களது விளைநிலங்களில் மானாவாரி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே விவசாய பணிகளுக்காக சென்றிருந்தவர்களில் சிலர் தாங்கள் செல்லும் பாதைகளில் வழக்கத்திற்கு மாறான வனவிலங்கின் காலடித் தடங்;கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுபற்றி தகவலறிந்த அப்பகுதியின் சமூக ஆர்வலரான ராமலிங்கம் மற்றும் ஊர்பெரியவர்கள் அந்த காலடித்தடங்களை பார்வையிட்டபோது அவைகள் சிறுத்தையின் காலடித் தடங்;களுக்கு ஒப்பாக இருப்பதை கண்டறிந்தனர்.
இதறற்கிடையே சிறுத்தை நடமாடியது குறித்து தகவலறிந்த சிவரக்கோட்டை கிராமமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் திரண்டுவந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.அப்போது சிறுத்தையின் காலடித் தடங்கள் பலஇடங்களில் பதிந்து இருப்பது கண்டு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் சிறுத்தையின் காலடி தடத்தை பின்தொடர்ந்து சென்ற சிலர் சற்று தொலைவில் மறைவான இடமொன்றில் புள்ளிமானொன்று இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.அந்த புள்ளிமானின் தலைப் பகுதியிலிருந்து பாதி உடம்பு மட்டுமே இருந்த நிலையில் மீதமுள்ள உடலை சிறுத்தை தின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.புள்ளிமான் இறந்து கிடந்த பகுதியிலும் சிறுத்தையின் காலடித் தடங்கள் இருப்பதும் தெளிவாக தெரிந்துள்ளது.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக சிவரக்கோட்டை கிராமத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள காட்டிற்கு சென்றிடும் விவசாயிகள் தங்களது பணிகளை வழக்கம் போல் செய்ய முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.மேலும் சிவரக்கோட்டை கிராமம்,அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் நான்குவழிச்சாலை போன்றவற்றில் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிகமிருப்பதால் அங்கு நடமாடிடும் சிறுத்தையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுஇருப்பதாக கூறிடும் கிராமமக்கள் இந்த விஷயத்தில் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்திடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து