முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      தமிழகம்
sengottaiyan

ஈரோடு : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடுஅரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-


ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறும். இதன் முதல் பகுதியாக மாணவ- மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை தொடங்கி வைத்துள்ளோம். மறைந்த முதல்வர் அம்மா நல்லாசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து எந்த தொய்வின்றி ஆட்சி நடக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து