முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் பகுதியில் ராணுவத்தினர்களிடையே மோதல் குறித்து தெரியாது என்கிறது சீனா

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து எதுவும் தெரியாது என்று சீன நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் பகுதியில் பங்கோங் என்ற ஏரி உள்ளது இந்த ஏரியின் கரை பகுதியில் சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி நுழைந்தனர். அதை இந்திய ராணுவத்தினர் பார்த்து தடுத்து நிறுத்தி சீன ராணுவ வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். பதிலுக்கு இந்திய வீரர்கள் சேர்ந்து சீன வீரர்கள் மீது கற்களை வீசினர். இதில் இருதரப்பிலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீன நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவா சன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் பங்கோங் ஏரி கரை பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி எங்கள் நாட்டு ராணுவம் நுழைந்தது குறித்து தெரியாது என்றார். எல்லைப்பகுதியில் அமைதி காக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்திய எல்லையையொட்டிய பகுதியில் அமைதி காப்பதில் எங்கள் நாட்டு ராணுவம் உறுதியாக உள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் எங்கள் ராணுவம் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் கட்டுப்பாடுடன் இருக்கும்படி இந்திய ராணுவத்தையும் கேட்டுக்கொண்டுள்ளோம். இருநாட்டு மரபுகளையும் கடைப்பிடிக்கும்படி கூறியுள்ளோம். இந்த மாதிரியான ஊடுருவல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் எங்கள் ராணுவம் எல்லையை பாதுகாத்து வந்துள்ளது. இரு நாடுகளிடையே எல்லைப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்டு சிறப்பு குழுவினர்களும் இதுவரை 19 முறை சந்தித்து பேசியுள்ளனர் என்று ஹூவா மேலும் கூறியுள்ளனர்.

டோக்லம் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஹூவா, எங்கள் பகுதியை இந்திய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அதனால் முதலில் இந்திய ராணுவம் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இருந்தபோதிலும் டோக்லம் மோதலுக்கு தீர்வுகாண தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று சீனா தெரிவித்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து