முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆயிரம் ஆண்டுகளின் கிழமைகளை கூறி இந்திய சாதனையாளரான கீழக்கரை மாணவன்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- 5 ஆயிரம் ஆண்டுகளின் கிழமைகளை கூறி கீழக்கரை மாணவன் புதிய சாதனை படைத்துள்ளான். இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மாணவனை கலெக்டர் பாராட்டினார்.
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது, சமீமா பர்வீன் ஆகியோரின் மகன் முகம்மது பஹீம்(வயது13). துபாயில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகின்றான். சிறுவன் முகம்மது பஹீமிற்கு அபார ஞாபக சக்தி திறன் உள்ளதை சிறுவயதிலேயே அவரின் பெற்றோர் கண்டறிந்தனர். அவர்களின் ஊக்கம் காரணமாக முகம்மது பஹீம் ஞாபக சக்தி திறன் அதிகரித்தது. உறவினர்கள் வீட்டிற்கு சென்றால் அங்குள்ள நாட்காட்டியை உற்று பார்த்து வந்த முகம்மது பஹீம் நாளடைவில் எந்த நாளை கூறினாலும் அதன் கிழமையை துல்லியமாக கூறியுள்ளான். இவ்வாறு சிறுவன் முகம்மது பஹீம் 5 ஆயிரம் ஆண்டுகளில் எந்த தேதியை வருடத்துடன் கூறினால் அதன் கிழமையை நொடிப்பொழுதில் கூறி வருகிறான். 5 ஆயிரம் ஆண்டுகளில் எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை கூறிஅனைவரையும் அசத்தி விடுகிறான்.  இதுதவிர, உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் துல்லியமாக தெரிவிப்பதோடு, எந்த நாட்டின் பெயரை கூறினாலும் அந்த நாட்டின் கொடி, மொழி, தலைநகர் உள்ளிட்ட விபரங்களையும் கூறஜ வருகிறான். 
   சிறுவன் முகம்மது பஹீம் 5 ஆயிரம் ஆண்டுகளின் தேதிகளை கூறினால் கிழமைகளை சரியாக கூறும் சாதனையை பாராட்டி இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான். இதற்காக திருச்சியில் உள்ள இந்திய சாதனையாளர் புத்தகத்தின் சார்பில் சிறுவனின் சாதனையை பாராட்டி சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கி உள்ளர். இந்த சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை ராமநாதபுரத்தில் இந்திய சாதனையாளர் புத்தக மாநில ஒருங்கிணைப்பாளர் கலைவாணி மேற்படி சிறுவனிடம் வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து சிறுவன் முகம்மது பஹீம் தனது குடும்பத்தினருடன் சென்று கலெக்டர் நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து