அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன் உறுதி

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      மதுரை
tmm news

திருமங்கலம்.- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட மாநில அம்மா பேரவைச் செயலாளர்,வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன் உறுதிபட தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும்,முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கே.தமிழரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாக பிரிந்திருந்த கட்சி தற்போது ஒன்றாக இணைந்துள்ளது. இந்திய வரலாற்றிலே பிரிந்து சென்ற மாபெரும் இயக்கம் மீண்டும் ஒன்றானது அ.தி.மு.க.வை தவிர வேறெதுவும் கிடையாது.காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து இணையாமல் போய்விட்டது.ஆனால் பிரிந்து மீண்டும் ஒன்றிணைந்த இயக்கம் அ.தி.மு.க மட்டும் தான்.இந்த இணைப்பினால் பொதுமக்களும்,கட்சியினரும் மகிழச்சியடைந்திருந்த நேரத்தில் கழக அம்மா பேரவை செயலாளரான,அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அந்த பொறுப்பிலிருந்து நீக்கி வேறு ஒருவருக்கு அந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.எங்களை பொறுத்த வகையில் கழக பேரவைச் செயலாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அம்மா அவர்கள் நியமித்துள்ளார்கள்.அதன்படி அவருடைய தலைமையில் நாங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.தொடர்ந்து செயல்படுவோம்.மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரவை நிர்வாகிகள்,பேரவை செயலாளர்கள் அனைவரும் அம்மாவால் நியமிக்கப்பட்ட மாநில அம்மா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சிறப்பாக ஒன்றுபட்டு செயல்படுவோம்.அ.தி.மு.க இணைந்ததை பொதுமக்களும்,கட்சியனரும் மகிழச்சியுடன் வரவேற்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருமங்கலம் பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் மற்றும் ஒன்றிய அம்மா பேரவை தலைவருமான சாத்தங்குடி.தமிழழகன் பேட்டியளிக்கையில்: மாநில அம்மா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களை கட்சிப்பதவியிலிருந்து நீக்கியதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அம்மாவால் நியமிக்கப்பட்ட கழக அம்மா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை  நீக்கிட அவருக்கு தகுதி கிடையாது.இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.கட்சியும்,ஆட்சியும் 100ஆண்டுகள் இருக்குமென அம்மா சொல்லியிருக்கிறார்கள். அதனால் அ.தி.மு.க இணைப்பினை பொதுமக்களும்,கட்சியினரும் வரவேற்கின்றனர்.அம்மாவின் சிறப்பான திட்டங்களை முதல்வர் எடப்பாடியாரும்,துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயல்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
அப்போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் உச்சப்பட்டி செல்வம்,ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவன்காளை,முன்னாள் உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் அம்h பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து