முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-  மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியம், கோயில்பாப்பாக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  துவக்கி வைத்தார்.
  இப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   துவக்கி வைத்து பேசியதாவது:
  மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள 420 ஊராட்சிகளில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட சுகாதார கணக்கெடுப்பின்படி கழிப்பறைகள் இல்லாத வீடுகளாக 1,53,431 வீடுகள் கண்டறியப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
  திறந்த வெளியில் மலம் கழித்தல் பழக்கத்திலிருந்து விடுதலை பெற்ற மதுரை மாவட்டமாக உருவாகியுள்ள ஊரகப்பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப்போட்டி மற்றும் குறும்பட போட்டி நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாவட்டத்திலுள்ள 420 ஊராட்சிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 
  இந்தப்போட்டியில் தூய்மை பாரத இயக்கத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், கிராம தன்னார்வலர்கள், இயற்கை வல்லுநர்கள், இளைஞர் நற்பணியினை சார்ந்தவர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.  இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
  கட்டுரைப்போட்டி (தமிழ் அல்லது ஆங்கிலம்) 250 வார்த்தைகளுக்கு மிகாமல் “தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பின் கீழ் கட்டுரைப்போட்டியும், குறும்பட போட்டியானது “தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு – எனது பங்களிப்பு” என்ற தலைப்பின் கீழ் 2 முதல் 3 நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோ கேமிரா அல்லது செல்போன் வீடியோ மூலம் தயாரிக்கப்பட்ட குறும்படத்தினை போட்டி நடைபெறும் கிராம ஊராட்சியில் நேரடியாக கலந்து கொண்டு திரையிடப்படவேண்டும்.
  இந்த குறும்பட போட்டியில் கலந்து கொள்பவர்கள் தூய்மை பாரத இயக்கத்திற்கு தன்னுடைய கிராமத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் அதனால் அக்கிராமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றிய விபரங்களை தங்களுடைய வெற்றிக்கதைகளாக தெரிவிக்கலாம்.  இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் முதல் இரண்டு இடங்களை பிடித்த போட்டியாளர்கள் 6.9.2017 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.  இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.  மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் மாநில குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
  சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இயக்க அலுவலகத்தில் 10.09.2017 அன்று மாவட்ட குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட போட்டியாளர்களில் மாநில அளவிலான தேர்வு குழுவினரால் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் வருகின்ற அக்டோபர் 2ம் தேதியன்று தேசிய அளவிலான தூய்மை பாரத இயக்க விருதுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
  நேற்று கோயில் பாப்பாக்குடியில் நடைபெற்ற போட்டியில் 20 நபர்கள் கட்டுரைப்போட்டிக்கும், 6 நபர்கள் குறும்படத்திற்கும் பங்கேற்றனர். 
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் (பொ.) அருண்மணி, உதவி திட்ட அலுவலர் (ர்ழரளiபெ) சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி (மதுரை மேற்கு) உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து