முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி

புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்ற¤ பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.
 பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவ,மாணவிகள் மண்டல அளவில் நடைபெற்ற  17 வயதுக்குட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி, 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் இறகுப்பந்து போட்டி ஆகிய போட்டிகளில் வெற்ற¤ பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
முன்னதாக இம் மாணவ,மாணவிகள்  நிலக்கோட்டை வட்ட அளவிலான போட்டிகளிலும், திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். பின்பு இவர்கள் கடந்த 4ம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
மண்டல அளவில் நடைபெற்ற  17 வயதுக்குட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் அக்டோபர் 13ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஈரோட்டில் மாநில அளவில் நடைபெறும் குடியரசு தின விழா போட்டியிலும், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் வெற்ற¤ பெற்றவர்கள் அடுத்த மாதம் அக்டோபர் 9 ம்தேதி முதல் 11ம் தேதி வரை மாநில அளவில் திருநெல்வேலியில் நடைபெறும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் விளையாட உள்ளனர்.
மாநில அளவிலான போட்களில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளையும் பயிற்சியளித்த ஆசிரியர்கள் செந்தில்குமார், கணேஷ்குமார் ஆசிரியைகள் தீபா, விஜயபாரதி ஆகியோரை பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் ராஜராம், பள்ளி தலைவர் கருணாகரன், செயலர் பிரசன்னா மற்றும் பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.
படம் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூடைபந்தாட்ட போட்டியில் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற பட்டிவீரன்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவிகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து