எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கால்நடை வளர்ப்பிற்காக செய்யப்படும் செலவுகளில் அதிகமான அளவு சுமார் 70 விழுக்காட்டிற்கு மேல், தீவனத்திற்காக செலவழிக்கப்படுகின்றது. அந்தச் செலவை எவ்வளவு அதிகம் முடியுமோ, அந்த அளவிற்கு குறைத்தால், பண்ணையின் இலாபத்தை அதிகரிக்கலாம். பராமரிப்புச் செலவுகளில் ஒரு அளவு உற்பத்தி கொடுக்காத கால்நடைகளைப் பராமரிக்க செலவிட நேரிடுகிறது. அவ்வகையில் முக்கியமானது வற்று மாடுகளின் பராமரிப்புச் செலவு மற்றும் கன்றுகளின் பரா மரிப்புச் செலவு ஆகியவையாகும். கன்றுகளின் பராமரிப்புச் செலவு மற்ற எல்லாவற்றை காட்டிலும் அதிகம்.
ஆனால், கிடாரி கன்றுகள் என்று கருதும்போது,‘இன்றைய கிடாரி தான் நாளைய பசு’ என்பதையும் கவனிக்க வேண்டும். ஆகவே, கிடாரிகளின் பராமரிப்பு சிறந்ததாக இருக்க வேண்டும். இளம் வயதில் சரியாக பராமரிக்கப்படாத கிடாரிகள் தக்க வயதை அடைந்தபோதும் பருவ வளர்ச்சியடையாமல் நல்ல உடல் நலம் இல்லாததால், இனபெருக்கம் செய்ய முடியாமல் போகிறது. எனவே, கிடாரிகளை பராமரிக்கும் செலவு குறைவாகவும், அதே சமயம் சீக்கிரத்தில் பருவமடைந்து அதிக கன்றுகள் ஈனும் திறன் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
கன்றுகளின் பராமரிப்பு அது பிறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. கன்று தாயின் வயிற்றுள் இருக்கும்போதே, தாய்ப்பசுவை அல்லது எருமையை நன்கு பராமரிக்க வேண்டும். அப்பொழுதுதான் கன்று பிறக்கும்போது நல்ல உடல் வலிமையுடன் பிறக்கும்.
கன்று பராமரிப்பு
(அ) சீம்பால்
பிறந்த கன்றுக்கு சீம்பால் கிடைக்கச்செய்ய வேண்டும். கன்று ஈன்றவுடன் தாயின் மடியிலிருந்து கெட்டியான, சிறிது மஞ்சள் நிறமான பால் சுரக்கும். இதுவே சீம்பால் எனப்படும். பொதுவாக 4 நாட்கள் வரையில் பசுக்களிடம் சீம்பால் சுரக்கும். சீம்பாலில் சாதாரணப் பாலைவிட ஏழுமடங்கு அதிக புரதச்சத்தும், இரண்டு மடங்கு மொத்த திடப்பொருட்களும் உள்ளன. இதில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இது கன்றுகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல்முறை சீம்பாலும், 10 முதல் 12 மணிநேரம் கழித்து இரண்டாவது முறை சீம்பாலும் கொடுக்க வேண்டும்.
பிறந்த 10 முதல் 12 மணிநேரம் வரை கன்றுகளின் சிறுகுடல் சவ்வுகள், நோய் எதிர்ப்புச் சக்திப் பொருட்களை உட்கிரகிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கும். பிறகு சிறுகுடலின் உட்கிரகிக்கும் திறன் குறைந்து விடும். எனவே, சீம்பாலை, கன்று பிறந்த உடனே கொடுக்க வேண்டும். இதை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அளிக்கலாம். சீம்பால் அளிப்பதன் மூலம் கன்று தக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும். தாய்ப்பசு இறந்துவிட்டாலோ, மடிவீக்கம் போன்ற நோய் ஏற்பட்டாலோ, சீம்பால் கிடைக்காத நிலை ஏற்படும். இச்சமயங்களில் இதரப் பசுக்களின் சீம்பாலை அளிக்கலாம்.
கன்று பிறந்து 30 நிமிடம் முதல் 45 நிமிடங்களுக்குள் எழுந்து தாயிடம் பால் குடிக்க முயற்சிக்கின்றன. அப்படி அவைகளாகவே எழுந்திருக்க முடியவில்லையென்றால் அவைகளுக்கு உதவவேண்டும். பிறந்த ஒவ்வொரு கன்றுகளையும் தனித்தனியாகக் கவனிக்கப்பட வேண்டும். குளிர்காலங்களில் பிறக்கும் கன்றுகளுக்குக் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். பிறந்த மூன்று நாட்களுக்கு கன்றுகளுக்குத் தனிக்கவனம் தேவை.
சீம்பால் குடிக்காத கன்றுகள் நோய் எதிர்ப்புத் திறனை குறைவாக பெற்று இருக்கும். எனவே, சீம்பாலைக் கொடுப்பது மிகவும் அவசியமாகும். சுகாதாரணமாகக் கன்றுகளை, பிறந்த உடனே தாயிடமிருந்து பிரித்து விடுதல் நல்லது. அல்லது குறைந்தது 4 நாட்களுக்குப் பிறகு பிரித்து, தனியே பால் அளிக்க வேண்டும். இவ்வாறு பிரிக்கப்பட்ட கன்றுகளுக்கு அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு வீதம் பால் அளிக்க வேண்டும்.
இதனால் கன்றுகள் அதிகமான அளவில் பால் குடித்து, கழிச்சல் போன்ற வியாதிகளால் பாதிக்கப்படாமலும் அல்லது குறைவாகப் பால் குடித்து வளர்ச்சியடையாமல் இருப்பதும் தவிர்க்கப்படுகிறது. கன்றுகளுக்கு வயது அதிகமாக, பாலின் அளவு குறைக்கப்பட்டு அடர்தீவனம், புல் முதலியவற்றை அளிக்க வேண்டும். முதல் 2 மாதங்களுக்கு உடல் எடையில் 5 விழுக்காடும், மூன்றாம் மாதத்திலிருந்து உடல் எடையில் 2 விழுக்காடும் பால் அளிக்க வேண்டும்.
இவற்றைத் தவிர பால் சுரப்பு அதிகமில்லாத மாடுகளின் கன்றுகளுக்கு அல்லது மனித உபயோகத்திற்காக அதிக அளவு பால் தேவைப்பட்டால், பாலிற்கு பதிலாக பால் பதிலி (Milk Replacers) என்று சொல்லக்கூடிய மாற்றுப்பாலை கன்றுகளுக்கு அளிக்கலாம். இவைகளைச் சரியான அளவில் கொடுத்தால், கன்று எடுத்துக்கொள்ளும் பாலின் அளவைக் குறைக்கலாம். பால் பதிலியில் உலர்ந்த மோர், உலர்ந்த கொழுப்பு நீக்கிய பால், மீன்தூள், வைட்டமின் ஏ,டி போன்றவைகள் இருக்கும். இதில் 450 கிராம் கலவையை 3.0 லிட்டர் தண்ணீருடன் கலந்து கன்றுக்கு அளிக்க வேண்டும். முதல் 60 நாட்களுக்கு 5 சதவீதமும் மூன்றாவது மாதம் முதல் 8 சதவீதமும் பால் பதிலி அளிக்கலாம்.
15 நாட்கள் அடைந்த கன்றுகளுக்குக் காய்ந்த புல்லை, கடிப்பதற்காக அளிக்கலாம். அடர்தீவனத்தைச் சிறிதளவு, அதன் வாயில் தடவினால், நாட்கள் ஆக ஆக, அது தானாகவே அடர்தீவனம் தின்ன ஆரம்பித்து, குடிக்கும் பாலின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும்.
1.கன்றுகள் பாலைக் குடிக்கும்பொழுது கடைசியில் சிறிது தீவனம் போட வேண்டும். கன்றுகள் அதை நாவினால் நக்கிச் சாப்பிடப் பழகும்.
2.தீவனத்தைச் சிறிதளவு நாக்கின் மேற்புறம் தடவி விடலாம். கன்றுத் தீவனம் மிகவும் சுவையாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
நல்ல சத்துள்ள பசுந்தீவனங்களை அதிகமான அளவில் அளிக்க வேண்டும். கன்றுகள் வளர வளர பசுந்தீவனம் இல்லாவிடில் வைக்கோல் போன்ற காய்ந்த தீவனத்தையும் சேர்த்து அளிக்கலாம்.
புரதமற்ற நைட்ரஜன் சத்துள்ள யூரியா போன்ற பொருட்களைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட வைக்கோல் (Urea treated staw) தயாரித்துக் கன்றுகளுக்கு அளிக்கலாம். இதனால் அதிக விலையுள்ள பிண்ணாக்குகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, தீவனச் செலவைக் குறைக்கலாம். வைக்கோலுடன் சர்க்கரைப்பாகு போன்ற மாவு பதார்த்த பொருட்களை உபயோகிப்பதால், வயிற்றில் உள்ள நுண்கிருமிகளால் யூரியா நைட்ரஜனிலிருந்து எளிதாகப் புரதபொருட்களைத் தயாரிக்க முடிகிறது. ஒரு மாட்டிற்கு 100 கிராம் யூரியாவிற்கு மேல் அளிக்கக்கூடாது.
100 கிலோ கிராம் எடைக்கு குறைவாக உள்ள கன்றுகளுக்கும் யூரியா அளிக்கக்கூடாது. கன்றுகள் மேய்ச்சலுக்குச் செல்ல ஆரம்பித்தவுடன்,மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும். நல்ல வெயில், மழைபோன்ற சமயங்களில் மேய்ச்சலுக்கு அனுப்புதல் கூடாது. கோடை நாட்களில் நண்பகலில், மாடுகள் அதிகமாக மேயாமல் நிழலையே நாடிச்செல்லும். ஆகவே, மேய்ச்சல் நேரத்தை அதிகரிப்பதற்காக காலையில் வெகு சீக்கிரத்தில் (அதாவது வெளிச்சம் தெரிய ஆரம்பித்தவுடன்) மேய்ச்சலுக்கு அனுப்பி விடவேண்டும். அதேபோல் மாலையில் சூரிய வெளிச்சம் மறைந்த பிறகும் (இருட்டும் நேரம் வரை) மாடுகள் மேய்தல் அவசியம். இதனால் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு குறைவதுடன், மாடுகளுக்கு நல்ல தேகப்பயிற்சியும் கிடைத்து உடல் வலுவடைகிறது.
எருமைக் கிடாரிகளின் பராமரிப்புச் சற்றுக் கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். கன்றுகளின் இறப்பு விகிதங்களில் எருமை கன்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகம். மூன்று மாத வயது வரை எருமைக் கிடாரி கன்றுகளுக்கு ஆரியோமைசின் போன்ற ஆன்டிபயாடிக்கை அளித்தால் வளர்ச்சி அதிகம் காணப்படும். சீம்பால் குடிக்கும் நாட்களிலும், மூன்று மாதங்களுக்கு மேலும், உயிர்கொல்லி மருந்துகள் அளிப்பது நல்லது அல்ல. மூன்று மாதங்களுக்கு மேல் அளிப்பதால் வயிற்றில் உள்ள கிருமிகளைக் குறைத்து, புளித்துபோகும் தன்மையைக் குறைத்துவிடும்.
எருமைக் கன்றுகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை, அவை களை வெளிவெப்பம் அதிகம் உள்ள காலங்களில் சிறிது நேரம் நீர்தெளிப்பான் அல்லது தண்ணீரில் மூழ்கி இருக்கச் செய்தல் அவசியம். எருமைகளில் வேர்வைச் சுரப்பிகள் குறைவாக இருப்பதால், தண்ணீரில் மூழ்கி இருக்கும்பொழுது, வெளிவெப்பத்தால் அதிகம் பாதிக்காமல் தடுக்கப்படுகிறது. இதனால் தான் இன்றும் கிராமங்களில் எருமைகளை தண்ணீரில் நனைய விடுகிறார்கள்.
தண்ணீரில் மூழ்கி வளரும் எருமைக் கன்றுகளின் வளர்ச்சி,சாதாரணமாக வளரும் எருமைக் கன்றுகளின் வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும். குளம், குட்டை போன்றவைகளில் எருமைகளை இவ்வாறு விடலாம். இல்லாவிடில் அதிக வெப்ப நாட்களில், எருமைகளின் மேல் தண்ணீர் தெளித்து அவற்றின் உடல் வெப்ப நிலை பராமரிக்கலாம். இதன் மூலம் உட்கொள்ளும் தீவனமும், நன்கு செரிக்கப்படுகிறது.
கால்நடைகளுக்குத் தீவனம் எவ்வளவு அவசியமோ, அதேஅளவு தண்ணீரும் அவசியமாகும். ஆகவே, கன்றுகளுக்கு எந்த நேரமும், சுத்தமான குளிர்ந்த குடிநீர் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். முக்கியமாக கோடைகாலத்தில் மட்டுமாவது குடிநீர் எப்பொழுதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அசுத்தமான கலன்களில் உள்ள நீர், கால்நடைகளுக்கு வியாதியைப் உண்டுபண்ணி, அதன் மூலம் அவற்றின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
(இ) எடை பார்த்தல்
வளரும் கன்றுகளின் எடையைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இது தீவன அளவைக் கட்டுப்படுத்திக் கொடுக்கவும், நோய் வருமுன் கண்டறியவும் உதவும். இதற்கு வயிற்றுப்புறத்தில் கோணியைக் கட்டி, பிறகு கோணியின் முனைகளில் கயிற்றைக்கட்டி எடைபார்க்கும் கருவியில் தொங்கவிட்டு அதன் எடையை அறியலாம். மாதம் ஒருமுறை எடைபோடுவது அவசியமாகும். புண்ணையாளர்கள் அடிக்கடி எடை பார்த்து வளர்ச்சியை கவனித்து வருவது அவசியம்.
சாதாரணமாக முன்கால்களுக்குப் சற்றுப் பின்னால் உள்ள மார்பின் சுற்றளவை அளந்து, அதன் எடையைக் கணக்கிட்டு அறியலாம். ஓவ்வொரு மாதமும் சுமார் ஐந்து முதல் ஆறு செ.மீ. சுற்றளவு அதிகரித்து வந்தால், கன்று நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது என்று அர்த்தம். எட்டு முதல் பத்து மாதம் நன்கு வளர்ச்சி அடைந்த கன்று, அதன் தாய் உயரம் வரை வளர்ந்து காணப்படும். நன்கு வளர்ச்சி அடையும் கன்றுகள், நாள் ஒன்றுக்கு 500 கிராம் எடை வீதம் அதிகரிக்கும். அதிக அளவு தீவனம் அளித்தால், மாடு கொழுப்படைந்து அதனால் சினை பிடிக்காமல் போகலாம்.
(ஈ) அடையாளக் குறியிடுதல்
சிறந்த பராமரிப்புக்கு, கன்றுகளுக்கு நிரந்தர அடையாளக் குறி இடுதல் அவசியமாகும். இதைக் காதின் அடிப்பகுதியில் எண்களையும், எழுத்துக்களையும் பச்சை குத்தியும், உலோகக் காதணிகளை அணிவித்தும் செயல்படுத்தலாம். அல்லது கழுத்தில் அடையாளக் குறித்தகடுகளை, சங்கிலி மூலம் தொங்கவிட்டும் செயல்படுத்தலாம்.
(உ) கொம்புக் குருத்தை நீக்குதல்
கன்றுகளுக்கு 3 முதல் 4 நாட்களுக்குள் கொம்புக் குருத்தை நீக்கி கொம்பு வளர்வதைத் தடுக்கலாம். இதனால் பிற்காலத்தில் மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கொம்புக் குருத்தைச் சுற்றியுள்ள முடியினைக் கத்தரித்துக் கொம்பை இரசாயனக் குச்சிகள் மூலமாக அல்லது காய்ச்சிய இரும்பினால் தீய்த்து விட வேண்டும். பின்னர் அதைச் சுற்றி வாசிலின் களிம்பு தடவி விட வேண்டும். பின் கொம்புக் குருத்தைச் சுற்றி வேப்பெண்ணெய் தடவி விடலாம். இதுஈக்கள் மொய்ப்பதைத் தவிர்க்கும்.
(ஊ) குடற்புழு நீக்கம்
கன்றுகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். அவைகளுக்கு மாதமொருமுறை குடற்புழு நீக்க மருந்தை அளித்தல் நல்லது. துவக்க மருந்து 21 நாட்களில் அளிக்க வேண்டும். சாதாரணக் குடற்புழு நீக்க மருந்துகளை சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். அவ்வப்பொழுது சாணத்தைப் பரிசோதித்து உரிய குடற்புழு நீக்க மருந்து அளிப்பதால் குடற்புழுக்கள் நீக்கப்பட்டு கன்று உட்கொள்ளும் தீவனம் முழுமையாக உட்கிரகிக்கப்பட்டு, கன்றின் துரித வளர்ச்சி, விரைவில் பருவமடைதல், உடல் எடைப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
(எ) உடற்பயிற்சி
கன்றுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. திறந்தவெளிக் கொட்டிலில் வளர்க்கப்படும் கன்றுகளுக்கு அதிக உடற்பயிற்சி தேவைப்படுவதில்லை. கொட்டிலில் கட்டிவைத்துப் பராமரிக்கப்படும் கன்றுகளுக்கு உடற்பயிற்சி தேவைப்படுகிறது. இவற்றைக் கட்டவிழ்த்து மேய்ச்சலுக்கு அனுப்பினால் தேவையான உடற்பயிற்சி கிடைக்கும்.
(எ) ஆண்மை நீக்கம் செய்தல்
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கன்றுகளை 8-10 வாரத்தில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். ஆண்மை நீக்கம் செய்வதன் மூலம் உடல் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். மேலும்,ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட காளைகளைக் கையாளுவது எளிது. ஆண்மை நீக்கம், அறுவைச் சிகிச்சை மூலமும், விரையடிப்பான் மூலமும் செய்யலாம். ஆண்மை நீக்கம் செய்வதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்தலாம்.
கன்றுகளுக்குக் கொட்டிலமைப்பு
கன்றுகளை ஒரு மாத காலமாவது தனித்தனியாக வளர்க்க வேண்டும். பிறகு மந்தையாக வளர்க்கலாம். கன்றுகளுக்கு அமைக்கப்படும் கொட்டிலமைப்பை, நல்ல வெளிச்சத்துடன் குளிர் மற்றும் வெயிலினால் பாதிக்கப்படாதவாறு அமைக்க வேண்டும். கன்றுகளை அவற்றின் தாய்ப்பசுக்களிடமிருந்து முழுமையாக பிரித்து ஒன்றாக சேர்த்து பராமரிக்கலாம். கன்றுகளை, கூரை வேய்ந்த கொட்டில் அமைப்புடன் சுற்றி உலாவி வர முழுமையாக வேலி போடப்பட்ட திறந்தவெளி அமைப்பு கொண்ட கொட்டிலில் வளர்க்கலாம்.
கன்றுகளுக்குத் தேவையான இடவசதி
0-1 மாதம் வரை : தலா 1.0 ச.மீ
4 மாதம் வரை : தலா 1.5 ச.மீ
9 மாதம் வரை தலா 2.0 ச.மீ
கிடேரிப் பராமரிப்பு
கோடைக்காலங்களில் கிடேரியின் வளர்ச்சி, தீவனப் பற்றாக்குறையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றது. இந்த நாட்களில் புரதம் நிறைந்த பசும்புல்லை அளிக்க வேண்டும். கோடை வெயில் அதிகமாக இருந்தால் தணிக்க, கிடேரியின் மீது 2 அல்லது 3 தடவை தெளிப்பான் மூலம் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். அருந்துவதற்கு குளிர்ந்த நீர் அளிக்க வேண்டும். பகல் நேரங்களில் நிழல் தரும் மரங்களின் கீழே மேயவிட வேண்டும்.
திறந்தவெளிக் கொட்டில் அமைப்பே கிடேரிக்கு மிகவும் சிறந்தது. கோடைகாலங்களில் குடற்புழு நீக்க மருந்து முக்கியமாக, சங்குப்புழுவை நீக்க அளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை புற ஓட்டுண்ணி நீக்க மருந்தை அளிப்பதன் மூலமும், ஓட்டுண்ணி நீக்கியை பயன்படுத்துவதன் மூலமும் வளர்ச்சி 10 சதவிகிதம் அதிகமாகிறது.
தொகுப்பு: முனைவர்.ப.ரவி, து.ஜெயந்தி மற்றும் ந.ஸ்ரீபாலாஜி, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை திருச்சியில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025சென்னை : திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.
-
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளுக்கு
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் விழா: ரூ.773 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025திருச்சி : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.773.
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
09 Nov 2025பெங்களூரு : கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
09 Nov 2025பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணிய
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2025சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு
09 Nov 2025பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது.
-
வாக்கு திருட்டு விவகாரத்தில் மேலும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்: ராகுல் காந்தி பேட்டி
09 Nov 2025பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை.
-
அந்தமான் கடலில் நிலநடுக்கம்
09 Nov 2025போர்ட் பிளேர் : அந்தமான் கடலில் நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.


