முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் திடீர் ஆய்வு:

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருமங்கலம் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் திருமங்கலம் டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அண்மையில் திருமங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாதாரண காய்ச்சல் தற்போது வேகமாக பரவிவருகிறது.இதையடுத்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் திருமங்கலம் நகர் சுற்றுப்புற கிராமங்களில் டெங்கு பரவிடாத வகையில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு 24மணிநேரமும் சிகிச்சை அளித்திட வசதியாக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு,பெண்கள் பிரிவு,ஆண்கள் பிரிவு மற்றும் காய்ச்சல் தடுப்பு பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நொயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.அப்போது டெங்குவால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 40பேர் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு தேவையான தராமான சிகிச்சையை வழங்கிடுமாறு மருத்துவர்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின் முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற டெங்கு சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் டெங்குவை தடுத்திட மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.இதையடுத்து தமிழக முதல்வரின் அறிவுரைப்படி மாவட்டம் தோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது 40பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு தொடர்பான பீதி மக்களிடையே பரவியுள்ளது.இதனை போக்கிட பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.திருமங்கலம் பகுதி முழுவதிலும் சுகாதார பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.மக்களின் பெரும்பான்மையை பெற்றுத் திகழ்ந்திடும் அம்மாவின் ஆட்சியை ஆயுள் குறைவு என்று ஸ்டாலின் கூறிவருகிறார்.அவ்வாறு சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் கிடையர்து.இந்த ஆட்சி நீண்டஆயுளுடன் இருக்க வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.வரும் 4ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து கொடுத்து அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி தொடர்ந்திடும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகர அவைத்தலைவர் ஜஹாங்கீர்,திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூமிநாதன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து