குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டும் காடை வளர்ப்பு

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      வேளாண் பூமி
velon

Source: provided

சமீப காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று ஜப்பானியக் காடை வளர்ப்புத் தொழில் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டுவதுடன், ஒரு மாத கால வயதிற்கு முன்பே விற்பனை செய் யப்படுவதால் அதிக முக்கியத்துவம் வாய்;ந்து விளங்குகிறது.

காடை இறைச்சி மற்றும் முட்டைகள் மிகச்சிறந்த சுவைமிக்க உணவாக விளங்குகிறது. அவற்றிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் இதர கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஒப்பிடும்போது அதிகமாக காணப்படுவதால் எல்லா வயது மக்களுக்கும் ஏற்ற உணவாக விளங்குகிறது.

காடை இனங்கள் : தற்பொழுது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்நாடு கால்நடை மருத் துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட TANUVAS  நந்தனம் காடை-1, TANUVAS   நந்தனம் காடை -2 மற்றும் TANUVAS  நாமக்கல் காடை-3 ஆகிய ரகங்கள் இறைச்சி உற்பத்திக்காக தற்பொழுது தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெருவாரியாக வளர்க்கப்பட்டு வருகிறது.

காடை வளர்ப்பு முறை :  காடைகளை வளர்க்க அதிகளவு முதலீடு தேவையில்லை. பயன்படுத்தாத கோழிப்பண்ணைகள் அல்லது குறைந்த முதலீட்டிலான கோட்டங்களில் காடைகளை வளர்க்கலாம். வசதிக்குத் தகுந்தாற்போல் ஆழ்கூளம் மற்றும் கூண்டுகளில் காடை களை கூண்டு முறையில் காடைகளை வளர்க்கும் போது அவற்றிற்கு நோய்க் கிருமிகளின் தாக்கம் குறைவதுடன் காடைகளை கையாள்வதும் எளிதாக இருப்பதால் ஆழ்கூளத்தைக் காட்டிலும் கூண்டு முறையில் வளர்ப்பதே சிறந்தது. ஆனால், அவற்றிற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகமாகத் தேவைப்படும்.
காடை குஞ்சுகள் பராமரிப்பு

ஒரு நாள் வயதுடைய இறைச்சி வகை காடை குஞ்சுகள் சுமார் 8.10 கிராம் எடையுடையதாக இருக்கும். முதல் பத்து நாட்களில் பருவநிலைக்குத் தகுந்தாற் போல் முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை வெப்பமும், அதன் பிறகு 7 நாட்கள் இரவு நேரங்களில் செயற்கை வெப்பமும் அளிப்பது நல்லது. நல்ல முறை யில் பராமரிக்கப்பட்ட இனப்பெருக்க காடைகள் மற்றும் குஞ்சு பொரிப்பான்களின் மூலம் பெறப்படும் காடை குஞ்சுகளில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான உயிரிழப்பே காணப்படும்.

பொதுவாக முதல் இரண்டு வார வயதில் பெரும்பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில் விழுந்து இறக்கும் இழப்பே அதிகமாகும். காடை குஞ்சு கள் தண்ணீர் பாத்திரங்களில் விழுந்து இறப்பதைத் தவிர்க்க தண்ணீரினுள் கோலி குண்டுகள் அல்லது கூலாங்கற்களை ஒருவாரம் வரை இடவேண்டும். தண்ணீர் பாத்திரங்களுக்கு பதிலாக நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்கள்(Nipple drinkers)  மூலமும் தண்ணீர் கொடுக்கலாம். இவ்வாறு நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்களை பயன்படுத்துவதால் சுத்தமான தண்ணீரைக் தொடர்ச்சியாக காடை குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.

மேலும் காடை குஞ்சுகளின் கால்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால் அவற்றை வழவழப்பான பரப்பில் (செய்தித்தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் போது அதிக காடை குஞ்சுகள் நொண்டியாகி, நாளடைவில் தீவனம் மற்றும் தண் ணீர் எடுக்காமல் இறக்க நேரிடும். எனவே காடை குஞ்சுகளை பராமரிக்கும் போது அவற்றை சொர சொரப்பான காகிதப் பரப்பில்(Corrugated sheet)   வளர்க்கலாம். அல்லது சணல் துணியைப் பரப்பி அதன் மேல் காடை குஞ்சுகளை முதல் மூன்று நாட்கள் வளர்க்கலாம். பின்னர், அவற்றினை வழவழப்பான செய்தித்தாள் போன்ற வற்றின் மேல் வளர்த்தாலும் கால்கள் ஊனமாவதில்லை. காடைகள் இரவில் தீவ னம் உட்கொள்ளத்தக்க வகையில் செயற்கை வெளிச்சம் அளிக்க வேண்டும்.

இறைச்சிக்காக காடைகள் இரண்டாவது வார வயதில் சுமார் 9c கிராம் எடையுடையதாக இருக்கும்.

வளர்பருவ பராமரிப்பு  :  இரண்டாவது வார வயது முதல் 4 அல்லது 5 வார வயதுடைய காடை களை வளர்பருவ காடைகள் (Grower quail) என்றழைக்கிறோம். இந்த வயதில் காடைகள் மிகுந்த சுறுசுறுப்புடனும் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவும் காணப் படும். இத்தகைய காடைகள் வேகமாக வளர்வதால் அவற்றிற்கு தொடர்ச்சியாக தீவனம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறைச்சிவகை காடைகள்  : 3 வார வயதில் சுமார் 150 கிராம் உடல் எடையும், 4 வார வயதில் சுமார் 210 கிராம் எடையும் உடையதாக இருக்கும்.

தீவனம் :  காடைகளுக்கு இரண்டு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும். முதல் இரண்டு வாரங்கள் ஆரம்பகால தீவனத்தையும்; (Cuail Starter feed)  பின்னர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இறுதிகால தீவனத்தையும் ; (Quail Finisher) அளிக்க லாம்.

காடைத் தீவனத்தை கோழித் தீவனத்திற்கு பயன்படுத்தும் மூலப்பொருட் களைக் கொண்டே தயாரிப்பதால், பிரத்யேக காடைத் தீவனம் கிடைக்காத பட்சத் தில் இறைச்சிக் கோழிகளுக்கு பயன்படுத்தும் முன் ஆரம்பகாலத் தீவனத்தையே (பிராய்லர் பிரிஸ்டார்டர்) முதல் நான்கு வாரங்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு காடையானது 200 கிராம் உடல் எடையை அடைய சுமார் 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.

காடை வளர்ப்பில் தீவனச்செலவு 70 விழுக்காடுகளுக்கும் அதிகமாக இருப்ப தால், தீவனச்செலவை குறைக்க வேண்டும். சொந்தமாக தீவனம் தயாரிப்பதின் மூலம் தீவனத்திற்கான செலவைக் குறைக்க முடியும்.

தண்ணீர் :  காடை வளர்ப்புக்கு தீவனமும் தண்ணீரும் மிகவும் இன்றியமையாத பொருள் களாகும். இவ்விரண்டும் நோய்க்கிருமிகளற்று சுத்தமாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் வருவதை தவிர்க்கலாம். எனவே, முதல் இரண்டு வாரங்கள் காடை குஞ்சுகளுக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த நீரைக் குடிநீராக அளிப்பது நல்லது. அதன் பின்னர் காடைகள் அருந்தும் தண்ணீரில் ஹைட்ரஜன் பெர்ஆக்ஸைடு என்ற கிருமி நாசினியை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து அளிக்கலாம்.

நோய்கள் :  காடைகளின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதிக நோய் எதிர்ப்புத் திறனாகும். இதர கோழியினங்களைப் போன்று காடைகள் பெரும்பாலான நோய் களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், காடைகளுக்கு எந்தவித தடுப்பூசியும் அளிக்கத் தேவையில்லை. தண்ணீர் மற்றும் தீவனம் சுகாதாரமாக இல்லாமலிருந் ளதால் அல்லது நன்றாக பராமரிப்பு முறைகளைக் கையாளாமலிருந்தால் அவற்றிற்கு நோய்கள் வரவாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் நோய்கள் வந்தால் அவற்றின் காரணத்தை அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி கண்டறிந்து சரியான மருந்துகளை அளிக்கலாம்.

இதைத் தவிர காடைகளைத் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது இறைச்சி கோழிகளை தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய்வ; (Coccidiosis) ர வாய்ப்புள்ளது. இதனைத தடுக்க தீவனத்தில் இரத்தக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்துகளை (Anti-coceidials)  கலந்து அளிக்கலாம். காடைகளை கூண்டு முறையில் வளர்க்கும் போது இரத்தக் கழிச்சல் நோய் பெரும்பாலும் வருவதில்லை.
காடைப்பண்ணைப் பொருளாதாரம்

தற்போது ஒரு காடைக்குஞ்சு ரூ. 4.50 முதல் ரூ.5.50 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. காடைத் தீவனமானது ஒரு கிலோவிற்கு ரூ. 28 முதல் ரூ.30 வரையில் கிடைக்கின்றன. ஒரு காடை அதன் விற்பனை வயது வரை சுமார் 500 கிராம் வரை தீவனம் உட்கொள்வதால், ஒரு காடை உற்பத்தி செய்ய ரூ. 19 முதல் ரூ.21 வரை செலவாகிறது.

ஒரு நாள் வயதுடைய காடைக்குஞ்சுகள் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலிருந்து பெறலாம். TANUVAS நாமக்கல் காடை -1” என்ற வீரிய ரக இறைச்சி வகை காடைகள் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின அறிவியல் துறையில் ரூ.5.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொகுப்பு : முனைவர் ப.ரவி, முனைவர் து.ஜெயந்தி,  மற்றும் மருத்துவர் ந.ஸ்ரீபாலாஜி
தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி, மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து