செட்டிநாடு பள்ளியில் தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி

karikudi

காரைக்குடி:- மத்திய அரசின் பாடத்திட்டதின் கீழ் இயங்கும்  cbse பள்ளிகள் மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அளவிலும், மண்டல அளவிலும் தேசிய அளவிலும் நடத்துகின்றன. இதில் பல்வேறு பள்ளிகளுக்கிடையே பல பிரிவுகளில் போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் நடத்தப்பட்டு அவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இவ்வகையில் காரைக்குடி செட்டிநாடு பள்ளியில் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கராத்தே, சிலம்பம் போன்று டேக்வாண்டோவும் ஒரு தற்காப்பு கலையாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். ஊடீளுநு தென் மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம்,தெலுங்கானா,கர்நாடகம், மகாராஷ்ட்ரம், கோவா, கேரளா, அந்தமான் நிகோபார் தீவுகள், இலட்சத் தீவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இம்மண்டலத்தை சேர்ந்த மொத்தம் 216 பள்ளிகள் இதில் பங்கேற்க உள்ளன. 869 மாணவர்களும், 393 மாணவியர்களுமாக மொத்தம் 1262 பேர் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஊடீளுநு ழுடிளநசஎநச திரு.திருமால் அவர்களும், திரு. டீ.கே.ராஜசேகரன் அவர்களும் இப்போட்டிகளை நடந்த உள்ளனர். இப்போட்டிக்கான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 5.10.2017(வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு, கர்னல் ஆர்.சிவநாதன், திருச்சி அவர்களால் துவக்கிக வைக்கப்பட உள்ளது. இப்போட்டியின் நிறைவு விழா வரும் 7.10.2017(சனிக்கிழமை) மாலை 3.00 மணி அளவில் நடைபெறும். இவ்வாறு இப்போட்டியை பற்றிய செய்திகளை செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் திரு எஸ.பி.குமரேசன் அவர்கள் தெரிவித்தார். மேலும் இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அப்பள்ளியின் முதல்வர் திரு ஜி.ஆர்.ரமேஷ் முன்னிலையில் ஆசிரியர் குழு கண்காணித்து வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து