Idhayam Matrimony

முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      விளையாட்டு
Deepti-Sharma-2025-12-23

துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

அன்னாபெல்லை... 

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஐ.சி.சி.யின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் அன்னாபெல் சதர்லேண்டை பின்னுக்குத் தள்ளி தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

அருந்ததி ரெட்டி...

737 ரேட்டிங் புள்ளிகளுடன் தீப்தி சர்மா தரவரிசையில் முதலிடத்தில் இருக்க, அன்னாபெல் சதர்லேண்ட் 736 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால், இங்கிலாந்து வீராங்கனைகளான சோஃபி எக்கல்ஸ்டோன் மற்றும் லாரன் பெல் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே உள்ளனர். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டி 5 இடங்கள் முன்னேறி 36-வது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீ சரணி 19 இடங்கள் முன்னேறி 69-வது இடம் பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து