திருச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம்து நடத்திய கைவினைக் கலைப்பயிற்சி முகாம் : கலெக்டர் கு.ராசாமணி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      திருச்சி
Trichy 2017 10 07

 

திருச்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் இணைந்து நடத்திய மாநில கைவினைக் கலைப்பயிற்சி முகாமில் சிறப்பாக கைவினை பொருட்கள் செய்த மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 பயிற்சி முகாம்

 திருச்சி மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் சார்பில் திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கைவினைக் கலைப்பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களின் தனித்திறன் வெளிப்படவும், மேலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் இது போன்ற கைவினைப் பொருள்கள் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.

 முகாமில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 100 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஓவியம் வரைதல், துணி ஓவியம், சுடுமண் பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர் பொம்மைகள் செய்தல், மெழுகு வர்த்தி தயாரித்தல் மற்றும் தேவையற்ற பொருள்கள் மூலம் பொருடகள் செய்தல் ஆகிய கலைகளை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் சிறப்பாக கைவினைப் பொருட்கள் செய்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களக்கு பாராட்டுகளை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

முகாமில் கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் முனைவர்.இரா.குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் பொ..பாண்டியன், திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கி.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் சி.நீலமேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து