கடலூர் மஞ்சக்குப்பத்தில் நாளை மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      கடலூர்

 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, 08.10.2017 அன்று செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சகுப்பத்தில் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, கலை அறிவியல் பட்டதாரி மாணவர்கள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.        மென்பொருள் உருவாக்கத் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று, கணினி மென்பொருள்  மற்றும் ஆன்டராயட் மென்பொருள் உருவாக்கத் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்காக பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய உள்ளார்கள்.  மருத்துவத்துறையில் உள்ள மருந்தாளுநர்இ செவிலியர் உதவியாளர், 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் ஆகிய பணியிடங்களுக்கும் மனுதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.பல்வேறு வங்கி மற்றும் தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களில்  உள்ள மேலாளர், காசாளர் மற்றும் பல்வேறு நிதி சார்ந்த  பணியிடங்களுக்கு பட்டதாரி மனுதாரர்கள் இம்முகாமில் தேர்வு செய்யப்பட  உள்ளார்கள்.மேல்நிலை கல்வித் தகுதி, பத்தாம்வகுப்பு கல்வித் தகுதி மற்றும் எட்டாம் வகுப்பு கல்வித்தகுதியுடைய மனுதாரர்களுக்கு ஏற்ற பணியிடங்களுக்கும் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட  உள்ளார்கள்.                   சென்னையில் உள்ள  முன்னணி  தனியார் ஒட்டல்  நிறுவனம் கேட்டரிங் டெக்னாலஜி, ஒட்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.    வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றம் நகல்களுடன் முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50 முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துக் கொண்டு, 4000 படித்த இளைஞர்களை பல்வேறு பணியிடங்களுக்காக தேர்வு செய்திடவுள்ளார்கள். கடலூர் மாவட்டத்தை சோர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியார்துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்ற செய்தியினை கடலூர் கலெக்டர்பிரசாந்த் மு வடநேரே   தெரிவித்துள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து