மழையால் வீடு இடிந்து விழுந்து மரணமடைந்த 5 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்திற்க்கான ஆணை: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      சேலம்
ph slm mini

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து மரணமடைந்த 5- நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்திற்க்கான ஆணைகளை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று (07.10.2017) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சி.கதிரவன் . , நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் .நா.மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிவாரண நிதி

 

கிருஷ்ணகிரி வட்டம் தண்டேகுப்பம் கிராமத்தில் கடந்த 05.10.2017 அன்று மழையின் காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கூக்கயைன் என்பவரின் மனைவி .ராதா, மகள் செல்வி.புஷ்பா, வெங்கடசாமி என்பவரின் மகன்கள் வசந்தகுமார், பகவதி (எ) சந்துரு மற்றும் முல்லையரசி ஆகிய 5- நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப வாரிதாரர்களான .ஜெயந்தி, செல்வம், காளிரத்தினம் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்திற்கான ஆணைகளை வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் 5 -நபர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவார உதவித் தொகைக்கான ஆணைகளை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ) வழங்கினார்.

இந்நிகழ்;ச்சியில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அருண்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோவிந்தராஜ், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, மாவட்ட பால் வள இயக்குநர் மாதையன், வட்டாட்சியர் கன்னியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சோக்காடி ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரசன்ன வெங்கடேசன், உதவி மக்கள்தொடர்பு அலுவலர் சு.மோகன், துணை வட்டாட்சியர்கள் கவாஸ்கர், .கங்கை கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து