முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கலெக்டர் நடராஜன் தகவல்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்க திருத்த முகாம் நடைபெறுகிறது என்று சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி கிராமத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் சுருக்கத் திருத்த முகாம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 01.01.2018-ஐ தகுதி நாளாகக்கொண்டு வர்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக கடந்த 03.10.2017 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படடுள்ளது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 11,24,679 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் வர்க்காளர் பட்டியலினை பொதுமக்களுக்கு வாசித்துக் காண்பிப்பதற்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.
 பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள  வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் இன்று(8-ந்தேதி) மற்றும் வரும் 22.08.2017 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாமகள்; நடைபெறவுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 இது தவிர, டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளை ஏடிஸ் கொசுப்புழு உருவாகாத வகையில் தூய்மையாக பராமரித்திட வேண்டும். உள்ளாட்சித்துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளும் தூய்மை பணிகளில் பொதுமக்களும் தன்முனைப்புடன் பங்கேற்றிட வேண்டும். ஊரக பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மறுசுழற்ச்சி செய்து ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்லம்மாள், வட்டாட்சியர் நா.சன்முகசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து