தி.மலையிலிருந்து காரில் கடத்தி வெங்காய வியாபாரியை கொன்றது ஏன்: கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையிலிருந்து வெங்காய வியாபாரியை கடத்தி கொலை செய்தது ஏன் என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆந்திரா மாநிலம் மாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதுலேதி (60) வெங்காய வியாபாரி இவர் கடந்த மாதம் 25ந் தேதி வேலூரில் வெங்காயம் பெற்ற ரூ. 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலையிலுள்ள ஒரு வியாபாரியிடம் பணம் வசூலிக்க வந்தார்.

வாக்குமூலம்

ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மதுலேதியின் மகன் பவன்குமார் கடந்த 1ந் தேதி திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மதுலேதி திருவண்ணாமலையிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்டு ஆந்திரா மாநிலம் புங்கனூர் அருகே கழுத்து நெரித்து கொல்லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த குமார் (31) மணியக்கார தெருவைச் சேர்ந்த இம்மதியாஸ் (24) அருணகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சையத்அலி (24) ஆகிய 3 பேரையும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். விசாரணையில் 3 பேர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது, மதுலேதி கடந்த 25ந் தேதி திருவண்ணாமலையில் வெங்காய மண்டி வைத்துள்ள குமாரிடம் வெங்காயம் விற்ற பணம் ரூ. 12 லட்சத்தை வாங்க வந்துள்ளார் அவரிடம் ரூ. 6 லட்சத்தை குமார் கொடுத்துள்ளார் பணத்தை பெற்றுக் கொண்ட மதுலேதி இரவாகிவிட்டதால் இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை செல்கிறேன் என கூறினாராம்.

அதற்கு குமார் இங்கு ஏன் தங்குகிறீர்கள் என்னிடம் கார் உள்ளது. உங்களை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிடுகிறேன் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரை சையத் அலி ஒட்டிச் சென்றார். மாற்று டிரைவராக இம்தியாஸ் உடன் சென்றார். ஆந்திர மாநிலம் புங்கனூர் அருகே சென்றபோது மதுலேதி காரை நிறுத்தச் சொல்லி விட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற குமார் மதுலேதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மதுலேதியிடம் இருந்த ரூ. 6 லட்சத்தை எடுத்துக் கொண்ட குமார் டிரைவர்கள் இம்தியாஸ் சையத் அலி ஆகியோருடன் சேர்ந்து மதுலேதியின் சடலத்தை அங்குள்ள பாலத்தின் கீழ் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரை போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து