நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      நாமக்கல்
3

 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (09.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 365 மனுக்கள் வரப்பெற்றன.

நடவடிக்கை

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5800ஃ- வீதம் ரூ.40,600ஃ- மதிப்பிலான மின்மோட்டர் பொருத்திய தையல் இயந்திரங்களையும், முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.20,000ஃ- வீதம் ரூ.40,000ஃ- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1200ஃ- வீதம் ரூ.3,600ஃ- மதிப்பிலான காதொலிகருவிகளையும், 39மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும்; என இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 51 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து