முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது கலெக்டர் நடராஜன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு முழுகட்டுப்பாட்டில் உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்புபணியில் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதி சுகாதார மாவட்டங்களில் மொத்தம் 156 மருத்துவ அலுவலர்கள், 11 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், 93 சுகாதார ஆய்வாளர்கள்; மற்றும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் 360 பேர்களும், நகராட்சியில் 148 பேர்களும், பேரூராட்சியில் 105 பேர்களும் Nசுர்ஆ மூலம் 50 பேர்களும் மொத்தம்  663 பேரும் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புகையடிக்கும் இயந்திரங்கள்; 102 மற்றும் வாகனத்தில் வைத்து பயன்படுத்தும் புகை மருந்து தெளிக்கும் இயந்திரம்  இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 உள்ளாட்சி அமைப்பின் மூலமாக திடக்கழிவு திட்ட தூய்மைக்காவலர்கள் 1834 பேரும், ஊராட்சியில் ஊதியம் பெறும் சுகாதாரப்பணியாளர்கள் 1667 பேர்களும் உள்ளனர். மேலும், உள்ளாட்சி துறைசெயலாளர்கள் அவசர அவசியம் கருதி மகாத்மாகாந்தி தேசிய ஊரன வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களையும் டெங்கு ஒழிப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி உள்ள  பகுதிகளில்; கொசுப்புழுஒழிப்பு, புகை மருந்துதெளிப்பு, மேல்நிலைநீர்தேக்கதொட்டிசுத்தம் செய்தல் மற்றும் குளோரினேசன், பெருவாரி துப்புரவுபணிகள்இ மருத்துவ முகாம்கள் (நடமாடும் மருத்துவ குழு), நிலவேம்பு குடிநீர் வழங்குதல் என 6 வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் உள்ளாட்சி துறை மற்றும் சுகாதாரதுறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன. நிதி பற்றாக்குறை உள்ள சிறு ஊராட்சிகளில் மாவட்ட ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி பெற்று இப்பணியினை தொய்வின்றி செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. 
 மேலும் மாவட்டத்தில் 30 படுக்கை வசதிகள் கொண்ட 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகின்றது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வைக்கப்பட்டு தினசரி வழங்கப்பட்டு வருகின்றது. 10 தாலுகா மருத்துவமனைகள் மற்றும் 37 தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிக் குறித்த தகவல்களை; சுகாதார ஆய்வாளர்களை அனுப்பி பெறப்பட்டு அதன் அடிப்படையில் தினசரி செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு களப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இரண்டு சுற்றுகள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.  மூன்றாம் சுற்று இம்மாத முடிவிற்குள் வழங்கப்படவுள்ளது. அதிகப்படியான காய்ச்சல் உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவகுழு அனுப்பப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.  பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்;, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய மாணவர் படையினர், நேரு யுவகேந்திரா தன்னார்வ தொண்டர்கள், காவல் துறை அலுவலர்கள், நீதிதுறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தூய்மையே சேவை என்ற திட்டத்தின்படி இந்த மாவட்டத்தில் 15.09.2017 முதல் 02.10.2017 வரையிலான காலத்தில் அரசு துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள் மற்றும் பொது வெளிகளில் பரந்துகிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.  இப்பணியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஊரகப் பகுதிகளின் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், குப்பை சேகரிப்பு மற்றும் அப்புறப்படுத்தும் பணியில் மக்கள் பங்கேற்பின் அவசியம் குறித்து 15.08.2017, 02.10.2017 மற்றும் 07.10.2017 ஆகிய தேதிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 1.10.2017 முதல் 15.10.2017 வரை தூய்மைக்கான இருவார இயக்கம் என்ற திட்டத்தின் கீழும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிக்கு முன்னுரிமை கொடுத்து பணி நடைபெற்று வருகிறது.
தற்போது ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களால் கழிவு செய்யப்படும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டி பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொட்டி இறுதியாக்கம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் எண்ணிக்கையில் சிமெண்ட் உறைகள் மூலமான குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேற்கொண்டு பொதுமக்கள் தங்களால் உருவாக்கப்படும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே கொட்டுவது தெரியவந்தால் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
 இப்பணியை பொருத்தமட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யக்கூடிய கொசு புழுக்கள் வளர்ந்துள்ள இடங்கள் கண்டறிந்து அதனை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதுகுறித்து வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இதற்கான சான்றினை அந்தந்த துறைத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்யப்படாமல் வழங்குவதன் மூலம் வைரஸ் போன்ற பிற நோய் தொற்றை உருவாக்கக்கூடிய கிரிமிகள் இருக்கும் என்பதால், குளோரினேசன் செய்யாமல் குடிநீர் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.   குடிநீர் தொட்டிகள் அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆங்காங்கே தனியார் டேங்கர் மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலவை உள்ளதால் என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு குளோரினேசன் செய்யப்படாமல் வழங்கப்படுவது தெரியவரும் நேர்வுகளில் அதன் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.
 இந்நிகழ்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து