முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாளை மாரத்தான் போட்டி விருதுநகர் கலெக்டர் தகவல்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, திருத்தங்கல் மெயின்ரோட்டில், அண்ணாமலையார்நகரில் அமைந்துள்ள மைதானத்தில் 23.10.17 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.   நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக சிறப்பான முறையில் செய்து வருகிறது.
மேலும், இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு துறைகள் மூலமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் 13.10.17 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சிவகாசி வட்டத்தில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி 6.4 கி.மீ தொலைவிலும், பெண்களுக்கான மாரத்தான் போட்டி 3.5 கி.மீ தொலைவிலும் தனித்தனியாக நடைபெறவுள்ளது.  மராத்தான் போட்டிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.
ஆண்களுக்கான மாரத்தான் போட்டி காலை 6.45 மணிக்கு சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் தொடங்கி, சிவகாசி பஸ் நிலையம் (வலது புறம்), காமக் ரோடு (பைபாஸ் ரோடு), ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம், பழனி ஆண்டவர் திரையரங்கம், இரட்டைச் சிலை, கார்னேசன் பஸ் நிறுத்தம், பெல் ஓட்டல், முனிசிபல் பார்க், முருகன் கோவில், அம்பேத்கர் சிலை, கவிதா டெக்ஸ்டைல்ஸ், சிவகாசி பஸ் நிலையம் வந்தடைந்து, மீண்டும் சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் முடிவடைகிறது. 
பின்னர் பெண்களுக்கான மாரத்தான் போட்டி 7.00 மணிக்கு சிவகாசி  ஏ.யு. நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் தொடங்கி, சிவகாசி பஸ் நிலையம் (இடது புறம்), கவிதா டெக்ஸ்டைல்ஸ், வசந்த் ரூ கோ.,  எஸ்.எச்.என்.பெண்கள் மேல் நிலைப் பள்ளி, யூனியன் வங்கி, வெம்பக்கோட்டை வளைவு, வீர காளியம்மன் கோவில் வந்தடைந்து, மீண்டும் சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முடிவடைகிறது.
எனவே, இப்போட்டிகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு போட்டியினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தவைர் அ.சிவஞானம், கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து