பொன்னேரியில் பொது மக்களுக்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      சென்னை
P neri

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம்,மீஞ்சூர்,பொன்னேரி,ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் [அம்மா] அணியின் சார்பில் பொதுமக்களுக்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிலவேம்பு குடிநீர்

 மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் மாரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை மாநில மாணவரணிச் செயலாளர்,பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா மற்றும் திருவள்ளூர் திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் டி..ஏழுமலை ஆகியோர் வழங்கினர்.

அதே போன்று பொன்னேரி பேரூர் கழக செயலாளர் துர்கபிரசாத் தலைமையில் பொன்னேரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிகளில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி,பொன்னேரி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் அனுப்பம்பட்டு சங்கர்ராஜா,மீஞ்சூர் மகேந்திரன்,ராஜாதாஸ்,கண்ணன்,சேகர்,மன்னாரு,மீனா,வெற்றிச்செல்வன்,சேதுராஜன்,பொன்னேரி நகர இளைஞரணி செயலாளர் கா.தயாளன்,பட்டமந்திரி ரமேஷ்,நாலூர் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அதே போன்று தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தட்சூர் கூட்டுச்சாலை மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

.இதில் மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி,மாவட்டசெயலாளர் இரா.சு.சேகர்,அவைத்தலைவர் பாபுராவ்,மாவட்டப்பொருளாளர் கோவிந்தராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் சிரளப்பாக்கம் இரமேஷ்,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன்,தெற்கு ஒன்றியச் செயலாளர் அங்கமுத்து,சோழவரம் ஒன்றியசெயலாளர் பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துக்கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து