முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய நினைவுச்சின்னம் அரூர் அம்மன் கிரானைட் சார்பில் முத்தானூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      சேலம்
Image Unavailable

 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என மாநில உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மருத்துவ முகாம்

 

 

 

அரூர் வட்டம் முத்தானூரில் இந்திய நினைவுச்சின்னம் உற்பத்தியாளர்கள் சங்கம், ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அரூர் அம்மன் கிரானைட் இணைந்து நடத்திய இதயம் மற்றும் பொது மருத்துவம் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

 

தருமபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றி யங்களில் உள்ள 98 கிராமங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க தலா 4 வாக னங்களில் அரசு மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்குவர்.

மேலும் இந்திய நினைவுச்சின்னம் உற்பத்தியாளர்கள் சங்கம், தருமபுரி மாவட்டத்தில் மேலும் சிறப்பு மருத்துவ முகாமை நடத்த வேண்டும் என்றார். முகாமில் இருதயம், பொது மருத்துவம், கண்பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், டெங்கு நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு (இ.சி.ஜி) எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தருமபுரி அகர் வால் கண் மருத்துவமனை, கிருஷ்ணகிரி ஸ்ரீ ராமச்சந்திரா இ.என்.டி.மையம் அரூர் பிரதிபா பல் மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் முன்னிலை வகித்தார். தொழில் அதிபர் முத்து ராமசாமி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், ஆர்.வி.ரமணி, கே.பத்திரி நாராயணன், எஸ்.முத்துராஜன், மருத்துவர் அர்த்தநாரி மற்றும் அரிமா சங்க இலை யப்பன், லக்கிமி கார்பரேசன் குருப்பு அம்மன் கிரானைட் (மக்கள் தொடர்பு அலுவலர் டி.எஸ்.பூபதி, மேலாளர் சீனிவாசன் மற்றும் அம்மன் கிரானைட் அலுவலர்கள் கலந்து கொண்டு இம் மருத்துவ முகாமில் சுமார் 4000 நோயாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து