தீபாவளி பண்டிகை இந்து மதத்தின் கலாச்சாரத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது - இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      கோவை
Image 2 0

பிரபல வெளிநாட்டு வாழ் முன்னணி இந்திய தொழிலதிபர்களான ஹிந்துஜா சகோதரர்கள் தங்களது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்ட விழாவின் போது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, சார்பில் பிரிட்டனின் சர்வதேச மேம்பாடு செயலாளர் ப்ரீத்தி பட்டேல் இந்து சமுதாயத்தினருக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் பண்டிகைகள் என்பது நமது வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கான ஒரு சிறப்பான வழியாக அமைந்திருக்கின்றன. அதிலும் தீபாவளி பண்டிகை இந்து கலாச்சாரத்தை மிகச் சிறப்பாக உணர்த்துவதாக அமைந்துள்ளது. மரியாதையைக் கற்றுக்கொடுக்கிறது. கௌரவத்தை கற்றுக் கொடுக்கிறது. நமது எதிர்க்காலத்தை வளமுள்ளதாக்கும் வகையில், கடந்த கால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது’
‘இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதிலும் வாழ்க்கைக்கான பெரும் பங்களிப்பை இந்து மக்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய பிரிட்டனின் வெளியுறவு செயலாளர்  போரீஸ் ஜான்சன். ‘’எனக்கு இந்திய அத்தை இருக்கிறார். அவரது பெயர் தீப்.  அவரது பெயருக்கு ஒளி என்று அர்த்தம். தீபாவளியானது, என் அத்தை வாழ்க்கையைக் கொண்டாட ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது’’ என்றார்.

ஹிந்துஜா குழுமத்தின், இணைத் தலைவர் ஜி.பி. ஹிந்துஜா கூறுகையில், ‘’ தீபாவளி, தீபங்களின் பண்டிகையாகும். கடந்த காலங்களில் நடந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதிரிகளை மறந்து, எல்லாத் தவறுகளையும் மறந்து அனைவருடனும் வாழ்க்கையின் நல்லதொரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறப்பான பண்டிகையாகும் “ என்றார். இந்நிகழ்ச்சியில்
இங்கிலாந்திற்கான இந்திய ஹை கமிஷனர் ஒய். கே. சின்ஹா மற்றும் பாரோஸ் சந்தீப் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து