திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டுசெய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      திருச்சி
Trichy 2017 10 24

 

திருச்சி எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் நாளை 26ம் தேதி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று (24.10.2017) தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

 புகைப்பட கண்காட்சி

 நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளியில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் 26.10.2017 அன்று ஜி கார்னர் மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது. மாவட்டமே குலுங்குகின்ற வகையில் எழுர்ச்சியான விழாவாகவும், மாநாடு போலவும் இருக்கும். இவ்விழாவில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

 நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அங்கமாக இன்று (24.10.2017) திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இப்புகைப்படக் கண்காட்சி அமைந்துள்ளது. அரசின் சாதனைகள், திட்டங்கள் பற்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக தொடர்ந்து வெளிவந்தாலும், இதுபோன்று மக்கள் கூடும் இடங்களில் புகைப்படக் கண்காட்சி அமைக்கும் போதுதான், திட்டங்கள் பொதுமக்களை எளிதாகச் சென்றடையும்.

இச்சிறப்புப் புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்வு, மீனவர்களுக்கு தனி வீட்டுவசதி திட்டம், 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இருமடங்காக உயர்வு, பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், விலையில்லா அரிசி, திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய ஏராளமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பொதுமக்கள் இப்புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.~Pர், மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் அமுதவள்ளி, மாநகராட்சி உதவிப் நிர்வாகப் பொறியாளர்கள் லோகநாதன், குமரேசன், உதவி இயக்குநர் (மக்கள் தொடர்பு) பொ..பாண்டியன், சத்திரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வம், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மலைக்கோட்டை ஐயப்பன், மகாலெட்சுமி, முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர்கள் எஸ்.டி.முத்துகருப்பன் மற்றும் கே.சி.பரமசிவம், ஜாக்லின் அருள்ஜோதி, பாலசுப்பிரமணியன், பெருமாள், பாலு, சாந்தி, அக்தர்பெருமாள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து