பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      ஈரோடு

சத்தியமங்கலம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் (பிஎம்எப்பிஒய்) பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என சத்தியமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் எம்,சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை சத்தியமங்கலம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய சத்தியமங்கலம் மற்றும் அரசூர் பிர்காவில் உள்ள அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெரும் விவசாயிகள்,  கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்ளப்படுவார்கள்.

கடன் பெறாத விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது பொது சேவை மையத்தின் மூலமாக பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில், இயற்கை இடர்பாடுகளால் உற்பத்தி இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்தல்,நவீன தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை வலியுறுத்துதல்,விவசாய பெருமக்களை உற்பத்தி இழப்பிலிருந்து பாதுகாப்பதுடன், உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதி படுத்தி வேளாண்மை வளர்ச்சியை மேம்படுத்துதல், சம்பா நெல் பயிருக்கு காப்பீட்டுத் தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.419 ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.  பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய தேவையான  விண்ணப்பம், பாஸ்போட் சைஸ் போட்டோ,ஆதார் அட்டை நகல்,சிட்டா / அடங்கல்,கிராம நிர்வாக அலுவலர் சான்று,வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்கம்  நகல்

ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து